கேராளாவில் 1200 கோடி ரூபாய் கிரிப்டோ மோசடி!! வெளியான அதிர்ச்சி தகவல்!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 28, 2022

கேராளாவில் 1200 கோடி ரூபாய் கிரிப்டோ மோசடி!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

மோரிஸ்காயின் என்ற போலியான காயின் பெயரில் ரூ.1200 கோடி பணமோசடியில் ஈடுபட்ட நபரை அமலாக்கத்துறையினர் இன்று கேரளா கண்ணூரில் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் மோரிஸ் காயின் என்ற பெயரில் கிரிப்டோ மோசடி நடைபெறுவதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இந்திய அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate) நாடு முழுவதும் 11 இடங்களில் கிரிப்டோகரன்சி மோசடிகள் குறித்து சோதனைகளை நடத்தியது.

அதில் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 31 வயதான நிஷாத் என்பவர், மோரீஸ்.காம் (morriscoin.com) என்ற இணையதளம் மூலம் இல்லாத ஒரு காயினை உருவாக்கி அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி 1.1 மில்லியன் வாடிக்கையாளர்களை ஏமாற்றியது கண்டறியப்பட்டுள்ளது. நிஷாத் இந்த மோசடி மூலம் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேராளவில் அதிக சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதைக் கண்டுபிடித்துள்ள அமலாக்கத் துறையினர் அவற்றைக் கைப்பற்றி முடக்கினர்.
கடந்த வருடம் நவம்பர் 2021 அன்று கேரள மாநிலம் கண்ணூரில் நிஷாத் உட்பட அவருடைய கூட்டாளிகள் ஏழு பேரை போலிஸார் கைது செய்து விசாரித்து வந்தனர். அதில் நிஷாத்திற்கு பெயில் கிடைத்து வெளியே வந்தவுடன் தலைமறைவாகியுள்ளார். அவரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என போலீஸ் தரப்பின் தகவல்கள் கூறுகின்றன. மேலும் மக்கள் இப்படி பெயர், முகவரி இல்லாத அடையாளம் தெரியாத நபர்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் எனவும் காவல் துறையினர் எச்சரித்தும் வந்தனர்.
இதற்கிடையில் இந்த கிரிப்டோ மோசடியில் கஃபூர் (Gafoor) எனும் முக்கியக் குற்றவாளியை கண்ணூரில் உள்ளதாக அமலாக்த்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து கஃபூரை கண்ணூரில் வைத்து கைது செய்து வரின் மீது 420 வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து விசாரனைக்காக வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

மோசடி பணத்தை என்ன செய்தனர் என்பது குறித்து முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என அமலாக்கத்துறையின் முக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad