சென்னை புளியந்தோப்பு பகுதியில் 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, புளியந்தோப்பு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி, திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ஜீவன் (எ) ஜீவன் ராஜ் (19) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 19ம் தேதி அன்று ஜீவன் ராஜ் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி திருவள்ளூருக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அதனை அடுத்து சிறுமியை மீண்டும் புளியந்தோப்புக்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் இது குறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில், ஜீவன் ராஜ், 13 சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச்சென்று பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது உண்மையென தெரியவந்தது.
அதன்பேரில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து ஜீவன்ராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment