மின்சார வாகனங்களின் விலை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
இன்றைய நவீன உலகில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிதரித்து வருகிறது. தனிமனித அந்தஸ்து. அடையாளமாக கருதப்படும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதன் காரணமாக சுற்றுச்சூழலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பெட்ரோல், டீசல் விலையேற்றம், மாற்று எரிசக்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்போது பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த வாகனங்களின் விற்பனையும் சந்தையில் நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், மின்சார வாகனங்களின் விலை குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி நாடாளுமன்ற மக்களவை முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
" இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டில் அனைத்து மின்சார வாகனங்களின் விலைகளும், பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும். நாடாளுமன்ற வளாகத்தில் சார்ஜிங் ஸ்டேஷனை நிறுவினால், எம்.பி.க்கள் மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்த முடியும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். எனவே கிரீன் ஹைட்ரஜன், மின்சாரம், எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ-எல்என்ஜி போன்ற மாற்று எரிப்பொருட்களுக்கு நாம் மாற வேண்டிய சரியான தருணம் இதுதான்" என்று நிதின் கட்கரி கூறினார்.
No comments:
Post a Comment