விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பங்குனி உத்திர விழாவில் முருகனுக்கு பூஜை செய்த ஒரு எலுமிச்சம் பழம் 15 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைய்நல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள இரட்டை குன்றின் மேல் ரத்திவேல் முருகன் கோயில் உள்ளது. கருவறையில் முருகன் சிலை இன்றி வேல் மட்டும் உள்ளது இந்த கோயிலின் சிறப்பாகும்.
இந்த கோயிலில் கடந்த 10-ம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், 9வது நாளான சனிக்கிழமை, மூலவர் வேலுக்கு எலுமிச்சம்பழங்கள் சாத்தப்பட்டு, அந்த எலுமிச்சம் பழம் இடும்பன் பூஜையில் வைத்து ஏலம் விடுவது வழக்கம்.
அந்த வகையில் ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில், இடும்பன் கோயில் பூசாரி ஆனி பதித்த செருப்பில் நின்றவாறு ஏலத்தை நடத்தினார். ஏலத்தில் எலுமிச்சை பழத்தை எடுக்க ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது திருமண வரன் அருளும் பழம் 15 ஆயிரம் ரூபாய்க்கும், குழந்தை பாக்கியம் அருளும் பழம் 15 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.
அதனைத் தொடர்ந்த் 9 எலுமிச்சைபழங்கள் ரூ.69 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. கடந்தாண்டு ஒரு லட்சத்து 43 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்ட நிலையில், இந்தாண்டு குறைவான தொகைக்கு ஏலம் விடப்பட்டது. இடும்பன் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு கருவாட்டு குழப்பு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment