ரியல்மி ஜிடி 2 சீரிஸ் ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ரியல்மி டிசைன் ஸ்டுடியோ மற்றும் நவோடோ ஃபுகுசாவா இணைந்து புதிய கட்டமைப்பை இந்த ஸ்மார்ட்போனிற்காக உருவாக்கியுள்ளது.
அது என்ன புது கட்டமைப்பு என்ற யோசனை உங்களுக்குள் எழும். ஆம், இயற்கை சூழலுக்கு ஏற்ற பயோ தொழில்நுட்ப அடிப்படையிலான பாலிமர் கொண்டு இந்த ஸ்மார்ட்போனின் பின்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி 2 சீரிஸ் ஸ்மார்ட்போன் 6.7” அங்குல 2K அமோலெட் பிளாட் எல்டிபிஓ டிஸ்ப்ளே உடன் வருகிறது. இதன் ரிப்ரஷ் ரேட் 120 ஹெர்ட்ஸ் ஆகக் உள்ளது. எச்டிஆர்10+ ஆதரவு இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பாதுகாக்க கார்னிங் கொரில்லா விக்டஸ் கண்ணாடி திரையின் மேல் பதிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி ஜிடி 2 கேமரா
ரியல்மி ஜிடி 2, ரியல்மி ஜிடி 2 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் 1.0µm பிக்சல்களுடன் ஒரே 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்766 (Sony IMX766) முதன்மை சென்சார்களைப் கொண்டுள்ளது. இதில் பயனர்கள் ஆடாமல், அசையாமல் படம்பிடிக்க ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக சாம்சங் ஜே என் 1 (Samsung JN1) 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா உள்ளது. மூன்றாவது 2 மெகாபிக்சல் மைக்ரோஸ்கோப் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்3 ப்ரோ (Oppo Find X3 pro) போலவே 40x வரை நெருக்கமான காட்சிகளை படம்பிடிக்கக்கூடிய திறன் கொண்டது.
ரியல்மிஜிடி 2 செயல்திறன்
ரியல்மி ஜிடி 2 ப்ரோ (Realme GT 2 Pro) ஆனது 12GB ரேம் உடன் 256ஜிபி அல்லது 512ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. செயல்திறனை ஊக்குவிக்க புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 5ஜி புராசஸர் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரியை ஊக்குவிக்க 65வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் உள்ளது.
பேப்பர் ஒயிட், பேப்பர் கிரீன், ஸ்டீல் பிளாக், டைட்டானியம் ப்ளூ ஆகிய வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் பயனர்களுக்குக் கிடைக்கும். ரியல்மி ஜிடி 2 விலை ரூ.30,000க்கும், ரியல்மி ஜிடி 2 ப்ரோ விலை ரூ. 42,000க்கும் இந்திய சந்தையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment