ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு 2022ஆம் ஆண்டின் முதல் பீட்டா அப்டேட்டை வாட்ஸ்அப் வழங்கியுள்ளது. பேஸ்புக்கில் இருந்து மெட்டாவாக உருமாறிய வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனம், செயலிகளில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது.
தற்போது ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு கொடுக்கப்பட்ட அப்டேட் குறித்த தகவலை Wabetainfo வெளியிட்டுள்ளது. புதிய அப்டேட் (Whatsapp Update) மூலம், ஐபோன் பயனர்களுக்கு நோட்டிபிகேஷன் (Whatsapp notification) உடன் செய்து அனுப்பியவரின் சுயவிவர படத்தையும் அதில் பார்க்க முடியும்.
அதாவது, ஒரு தனிப்பட்ட பயனர் அல்லது ஒரு குழுவிலிருந்து ஒரு புதிய செய்தியைப் பெறும்போது, அதனை அனுப்பியவரின் புகைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கும். ஐஓஎஸ் 15 இயங்குதளம் பயன்படுத்துவோரில், ஒரு சிலருக்கு மட்டுமே இந்த அம்சம் தற்போது கிடைத்துள்ளது. சோதனை முயற்சியாக வாட்ஸ்அப் இதனை வெளியிட்டுள்ளது.
மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப், இன்னும் பல அம்சங்களுடன் மேம்பட்ட பதிப்பு வெளிவரும் என அறிவித்திருக்கிறது. தற்போது சிலருக்கு கிடைத்திருக்கும் இந்த அப்டேட்டில், சில சிக்கல்கள் எழலாம் என WABetaInfo தளம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இதன் முழு பதிப்பு வெளியாகும் சமயத்தில் அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தான் 2.22.1.1 பீட்டா பதிப்பு, ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கியது. புதிதாக ஒரு அம்சத்தினை நிறுவவும் வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது குழுக்களை (Whatsapp Groups) போன்று வாட்ஸ்அப் கம்யூனிட்டிகளை (Whatsapp Community) உருவாக்க நிறுவனம் திட்டம் தீட்டிவருகிறது.
இதனை உறுதிபடுத்தும் விதமாக, இரண்டு வாரங்களுக்கு முன் ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு கிடைத்த அப்டேட்டில் சில காரணிகள் காணப்பட்டது. புதிய தளத்தில் வாட்ஸ்அப் செயலியை மேம்படுத்த மெட்டா பல திட்டங்களை வகுத்துள்ளதாகத் தெரிகிறது.
வாட்ஸ்அப் அப்டேட் குறித்து கசிந்த சில பதிவுகளைக் கொண்டு பார்க்கையில், பல குழுக்களை ஒருங்கிணைக்க கம்யூனிட்டிகள் உதவும் என்று தெரியவந்துள்ளது. இதன்மூலம், சிதறி கிடக்கும் சிலவற்றை ஒருங்கிணைக்க முடியும் என்று வாட்ஸ்அப் நம்புகிறது.
No comments:
Post a Comment