காயின்பேஸ் கிரிப்டோ தளம் ரஷ்யர்களுடன் தொடர்புடைய 25,000 கிரிப்டோ கணக்குகளை முடக்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளங்களில் ஒன்றான காயின்பேஸ் (Coinbase) ரஷ்ய தனிநபர்கள் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் நிறுவனங்கள் தொடர்பான 25,000 முகவரிகளைத் தடுத்துள்ளதாகக் கூறியுள்ளது.
காயின்பேஸ் மற்றும் பைனான்ஸ் (Binance) மற்றும் க்ராகென் (Kraken) போன்ற பல பெரிய உலகளாவிய கிரிப்டோ நிறுவனங்கள் ரஷ்யாவின் குடிமக்களுக்கு சொந்தமான கிரிப்டோ கணக்குகளைத் முடக்கின.
மேலும் இந்த தகவல்களை காயின்பேஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளது. மேலும் ரஷ்யா மீது குறிப்பிட்ட நாடுகளும் இந்த கருத்துக்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.
ஆனால் ரஷ்யர்களின் கிரிப்டோ கணக்குகள் மீதான முடக்கங்கள் சாத்தியமற்றவை என்றும் அவற்றை டாலருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றை நடைமுறைப்படுத்துவது சற்று கடினம் என காயின்பேஸின் சிஇஓவான பிரையன் ஆம்ஸ்ட்ராங் அவரின் ட்விட்டர் பக்கத்தில் அவரின் கருத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிப்டோ-பரிமாற்ற தளம் ரஷ்ய கணக்குகளுக்கு ஒருதலைப்பட்ச தடை விதிக்கப்பட்டால் சோதனை காலங்களில் அப்பாவி ரஷ்ய முதலீட்டாளர்கள் விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று கூறுகிறது.
No comments:
Post a Comment