பெண் குளித்ததை பார்த்ததாக சண்டை... அவமானம் தாங்க முடியாமல் வாலிபர் தற்கொலை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 8, 2022

பெண் குளித்ததை பார்த்ததாக சண்டை... அவமானம் தாங்க முடியாமல் வாலிபர் தற்கொலை

கண்டமங்கலம் அருகே பெண் குளித்ததை பார்த்ததாக கொலை மிரட்டல் விடுத்ததால் அவமானத்தில் வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதுார் காலனி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாது (23). இவர் நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் வீட்டின் பின்புறம் உள்ள குளியல் அறையில் குளித்துவிட்டு, வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் தினேஷ் மனைவி தீபா தான் குளித்ததை மது பார்த்ததாக கூறி, கணவர் தினேஷ் (எ) தீனா, மாமியார் அரசகுமாரி ஆகியோர் தடியுடன் மது வீட்டிற்குச் சென்று தரக்குறைவாக பேசி வெளியே வரவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் எனக்கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.
தீபாவும் மதுவை தரக்குறைவாக பேசியுள்ளார். இதைக்கண்ட, மதுவின் தங்கை மாளிகா, வடமங்கலத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்யும் தனது தாயார் மலருக்கு போன்செய்து தகவல் தெரிவிக்க உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து தகவல் அறிந்து தாயார் மலர் காலை 9.10 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் மது வீட்டின் சிலிங்கில் உள்ள சிமெண்ட் கட்டையில் துப்பட்டா மூலம் துாக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். உடனே உறவினர்கள் துாக்கில் இருந்து மதுவை மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மது ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மலர் கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று மாலை மதுவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் நவமால்மருதுாரில் அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad