ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவி பலியாகிய நிலையில் தொடரும் உயிர் பலியை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடுவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவர் அரசு பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஜனனி (16) திருப்பத்தூர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தனது உறவினரின் ஈமக்காரிய நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு வந்தனர்.
ஒகேனக்கலில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த ஜனனி முதலைப்பண்ணை எதிரே உள் காவிரி ஆற்றில் குளித்த போது நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்குச் சென்று விட்டார். ஜனனி ஆற்றில் மூழ்கியதை பார்த்த உறவினர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக ஒகேனக்கல் காவல்துறையினருக்கும் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த ஒகேனக்கல் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கிய ஜனனியை தேடும் பணியில் ஈடுபட்டு சுமார் 3 மணி நேரத்திற்குப் பின்பு ஜனனியின் உடலை கைப்பற்றி ஒகேனக்கல் காவல்துறையினர் ஜனனியின் உடலை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 35 நாட்களில் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதனால், நீரில் மூழ்கி உயிர் இறப்பதை தடுக்கும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment