புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் ஆடுகளை திருடி தப்பி செல்லும் சிசிடிவி காட்சியை வெளியிட்டு போலீஸ் தேடி வருகிறது.
புதுச்சேரி கருவடிக்குப்பம், லாஸ்பேட்டை, சண்முகாநகர் பகுதியில் தொடர் ஆடு திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், கருவடிக்குப்பம் எடையான்சாவடி ரோட்டில் 2 ஆடுகள் திருடு போனது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 2 விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல், ஆடைகளை திருடி மறைத்து செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இதுவரை அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment