ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதவ்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன அவற்றுக்கு அவர் அளித்த பரபரப்பான பதில்களின் சாரம்சம்:
அரசியல் பிரபலங்களை உயர் சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வதில் தவறில்லை. எம்ஜிஆரை போல, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில், அவரை மேவ்சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என்று அப்போதைய அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் கூறினேன்.
மருத்துவர்களிடம் கலந்து பேசி, ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என்று விஜயபாஸ்கர் கூறினார். ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்து செல்வது குறித்து ராம் மோகன் ராவ் தன்னிடம் எதுவும் பேசவில்லை.
தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவர்களை அப்பல்லோ மருத்துவமனைக்கு வரவழைத்தனர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது.
ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், ஒரு வாரத்தில் குணமடைந்துவிடுவார் என்று அப்பல்லோ மருத்துவர் விஜயகுமார் ரெட்டி தெரிவித்தார்.
அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை. தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் இருந்து, துணை முதல்வராக பொறுப்பேற்கும்வரை தான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே என்று ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது அது குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என முதன்முதலில் கோரிக்கை விடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment