மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி டொயோட்டா நிறுவனத்தின் மிராய் காரை அறிமுகம் செய்துள்ளார். இந்த காரின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கார் இந்தியாவின் முதல் ஹைட்ரொஜென் கார் ஆகும். இந்த கார் ஒரு சிறந்த மாற்று என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த காரின் டைல் பைப் புகை வெளியிடுவதற்கு பதிலாக தண்ணீரை வெளியிடும் என்று தெரிவித்துள்ளார். இந்த கார் பற்றிய முழுமையான தகவல்களை அறிய இந்த பதிவை காணலாம்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்திய போக்குவரத்து துறை வளர்ச்சிக்காக பல்வேறு கட்ட மேம்படுத்தும் திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் டொயோட்டா நிறுவனத்தின் மிராய் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்.
இந்த கார் FCEV எனப்படும் FUEL CELL ELECTRIC VEHICLE ஆகும். இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் “உலகின் முன்னணி டெக்னாலஜி கொண்ட காரை அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக” தெரிவித்துள்ளார்.
கார் விவரம்
Toyota Mirai intஇந்த டொயோட்டா மிராய் கார் ஹைட்ரஜன் பியூயல் செல் பேட்டரி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ரேஞ்சு 650 கிலோமீட்டர் ஆகும். இதனை மீண்டும் சார்ஜ் செய்ய 5 நிமிடங்கள் இருந்தாலே போதுமானது.
இந்த ஹைட்ரஜன் உலகம் முழுவதும் பல மடங்கு கிடைக்கிறது. இந்த வகை கார் அறிமுகம் மூலம் சுற்று சூழல் மாசு இல்லாத இந்தியாவை உருவாக்கமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த டெக்னாலஜி வரும் காலங்களில் பல கார்களில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Toyota Mirai roofடெக்னாலஜி மூலம் பேட்டரி மற்றும் ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் கார்கள் எதிர் காலங்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும். முதல்கட்டமாக இந்த வகை கார்களை தற்போது சந்தையில் சோதனை செய்து அதன் மேன்பாடு குறித்து நன்றாக ஆராய்ச்சி செய்து பின்னர் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிகிறது.
Toyota Mirai engineடொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனமும் ICAT எனப்படும் (இன்டர்நேஷனல் சென்டர் போர் ஆட்டோமோட்டிவே டெக்னாலஜி) ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து இந்த FCEV ரக டொயோட்டா மிராய் காரை அறிமுகம்
இதன் அறிமுகம் மூலம் இந்தியாவில் சுற்று சூழல் பாதிக்காத வண்ணம் இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிகிறது. பெட்ரோல் டீசல் கார்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் கார்கள் உள்ளதுபோல தற்போது எலக்ட்ரிக் கார்களிலேயே ஹைபிரிட் கார்களாக இந்த ஹைட்ரஜன் கார்கள் வந்துவிட்டன.
Toyota Mirai fuelஇந்த ஹைட்ரஜன் மறுஆக்கம் செய்யும் எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்யாத டொயோட்டா நிறுவனம் முதல் முதலாக ஒரு எலக்ட்ரிக் ஹைபிரிட் காரை அறிமுகம் செய்துள்ளது சிறப்பம்சமாகும்.
இந்த கார் தற்போது அறிமுகம் ஆனதால் இதுபோன்ற கார் இந்தியாவில் பலதரப்பட்ட நிறுவனங்கள் மூலம் வரும்காலங்களில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. எல்லா நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் இந்த காலகட்டத்தில் டொயோட்டா நிறுவனம் இந்த வகை ஹைபிரிட் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ளது சற்று வித்யாசமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment