அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், அதிபர் ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் பொதுமக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கை அரசிடம், அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. இதனால் அங்கு நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது..
அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின விலையு்ம் இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அரிசியின் விலை இலங்கை ரூபாய் மதி்ப்பில் 448, ஒரு லிட்டர் பால் 263 ரூபாய்க்கும் லிற்கப்படுகிறது.
இதேபோன்று கோதுமை மாவு, சர்க்கரை, பருப்பு என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அன்றாட பொருட்களின் விலைதான் இப்படியென்றால், ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இப்படி அத்தியாவசியப் பொருட்களில் இருந்து ஆபரண தங்கம் வரை அனைத்தின் விலையும் ஏறியுள்ளதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், விலைவாசி உயர்வை கண்டித்து அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் கோத்தபாய ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டும் எனக் கோரி தலைநகர் கொழும்பில் போராட்டம் வெடித்துள்ளது.
எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனதாதளம் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிபருக்கு எதிராக திரண்டு போராடி வருகின்றனர்.
No comments:
Post a Comment