தமிழகத்தில் கொரோனா நான்கு அலை வருமா, வராதா என்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை தொடக்கப் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தபின் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது:
10 வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றியை கொடுத்த சென்னைப் பள்ளியில் இதுவும் ஒன்று. மேல்நிலை பள்ளியாக்க வேண்டும் என்று பல நாட்களாக கேட்டு வரும் நிலையில் போதிய இடம் இல்லாததால் அது முடியவில்லை.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 39 பள்ளிகளை தரம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. 126 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. விரையில் அவை மாணவர்கள் பயன்பாட்டிற்கு வரும்.
தமிழகத்தில் மொத்தமாக 12-14 வயதுடைவர்கள் 21.21 லட்சம் பேர் உள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6,29,100 (29.66%) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல, 15-18 வயதுடையவர்களில் 28.37 லட்சம் பேருக்கு (84.81%) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 4 ஆம் அலை வருமா, வராதா என்று தெரியவில்லை. ஆனால் அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு எடுத்து வருகிறத. தமிழகத்தில் 22 மாவட்டத்தில் கொரொனா பாதிப்பு தற்போது பூஜ்ஜியமாக உள்ளது. அதேபோல கடந்த 10 நாட்களாக இறப்பு எண்ணிக்கையும் ஜீரோவாக இருக்கிறது.
பொதுமக்கள் தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டோம் என அலட்சியமாக இருக்கக்கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்த 3 மாதத்திற்கு தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மேலும், அருகே இருக்கும் மாநிலங்கள், நாடுகளில தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் இன்னும் 51 லட்சம் பேர் தற்போது வரையும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கிறார்கள், அதேபோல 1.32 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். முதல் தவணை தடுப்பூசிகூட செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்கள் குறித்து முதல்வர் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment