கொரோனா காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்த திருப்பதி-புதுச்சேரி விரைவு ரயில் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில் தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது மீண்டும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, திருப்பதி -புதுச்சேரி( எண்:16111) இடையே அதிகாலை 4.20 மணிக்கும், மறுமார்க்கத்தில் புதுச்சேரி-திருப்பதி(16112) இடையே பிற்பகல் 2.55 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல, சூலூர்பேட்டை-நெல்லூர்(06747) -நெல்லூர்-சூலூர்பேட்டை(06748), திருவனந்தபுரம் சென்ட்ரல்-நாகர்கோவில்(06433) -நாகர்கோவில்-திருவனந்தபுரம் சென்ட்ரல் (06428) விரைவு ரயில்களும் வரும் 1 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன.
மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை(06743) -சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட்(06744) இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வரும் ஏப்ரல் ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment