பூஜை விளக்கை அணைக்க சென்ற 5 வயது மகள் பலி: தாம்பரத்தில் துயர சம்பவம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 27, 2022

பூஜை விளக்கை அணைக்க சென்ற 5 வயது மகள் பலி: தாம்பரத்தில் துயர சம்பவம்

தாம்பரம் அருகே வீட்டில் தீபம் அனைக்க முயன்ற போது தீ பற்றி ஐந்து வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் கண்ணப்பர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருக்கு ஐந்து வயதில் ஜீவஸ்ரீ என்ற மகள் இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை பூஜை அறையில் எரிந்துகொண்டிருந்த விளக்கை அணைக்குமாறு ஜீவஸ்ரீயிடம் தாய் கூறியிருக்கிறார்.

விளக்கை அணைக்க சென்ற ஜீவஸ்ரீ மீது எதிர்பாராதவிதமாக எரியும் விளக்கு விழுந்துள்ளது. இதில் குழந்தை அணிந்திருந்த ஆடையில் தீ பற்றி எரிந்துள்ளது. மகளின் அலறல் சத்தத்தை கேட்ட தாய் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார்.
இருப்பினும் ஜீவஸ்ரீ கை, கால் ஆகிய பகுதியில் 68% தீ காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் முதலுதவி சிகிச்சை அளிக்கபட்ட பின்பு மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி ஜீவஸ்ரீ பரிதாமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad