முதல்வர் ஸ்டாலின் மீதே வழக்கு; தெறிக்கவிட்ட பாமக! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 27, 2022

முதல்வர் ஸ்டாலின் மீதே வழக்கு; தெறிக்கவிட்ட பாமக!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பாமக வெளியிட்டுள்ள புதிய தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

விருதுநகரில் கூட்டுபாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நீதி கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக மாநில பொருளாளர் திலகபாமா தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு கட்சி பாரபட்சம் இல்லாமல் தண்டனை கிடைக்க வேண்டும்.

மேலும் 21 நாட்களுக்குள் இளம்பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு அரசு வேலை, நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து பாமக பொருளாளர் திலகபாமா நிருபர்களை சந்தித்து கூறியதாவது:
திமுகவால் தமிழக கலாச்சாரம் அழிந்து கொண்டிருக்கிறது. தமிழக கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் திமுக செய்யும் அனைத்து அட்டூழியங்களையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக கலாச்சாரத்தை அழிக்கும் பணியை திமுக கவனமாக செய்து வருகிறது. 10 அண்டுக்கு முன்பில் இருந்தே திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் உள்ளது.

திமுக நேரத்து ஏற்றார்போல் மாற்றிக்கொள்ளும். தேர்தலுக்கு முன்னாடி ஓடி வாங்க ஓடி வாங்க.. நகையை அடகு வையுங்கள். நாங்கள் வந்தால் நகை கடனை தள்ளுபடி செய்வோம் என சொன்னாங்க.

ஆனால், தேர்தலில் ஜெயிச்சு வந்ததும் இல்லை.. இல்லை.. நிறைய நகைகளை அடகு வைத்து சீட்டிங் செய்யுறாங்கன்னு சொல்றாங்க. மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.1000 தருவதாக அறிவித்தீர்கள்.

இன்னைக்கு பணம் இல்லைன்னு சொல்றீங்க. திமுக உள்ளே வரும் முன்பாக தமிழ்நாட்டை அதிமுக என்ன கண்டிஷன்ல வச்சுட்டு போனாங்கன்னு உங்களுக்கு எதுவும் தெரியாதா?

ஒரு கட்சியின் தலைவரே மனைவி, துணைவின்னு பேசினால் மக்கள், பெண்கள் யாரை நம்புவது? மு.க.ஸ்டாலின் மீது எத்தனை வழக்குகள் உள்ளன? செய்தி வாசித்தவர்கள் பின்னால் யார் யார் போனார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
அதிமுக 5 வருடம் இருந்து வாங்கிய கடனுக்கு இணையாக திமுக வந்த 10 மாதத்தில் அதே அளவுக்கு சமமான கடன்களை வாங்கியுள்ளது. இந்த கடன்கள் எல்லாம் எங்கே போனது? புதிய புதிய டாஸ்மாக் கடைகள் தான் திறந்துள்ளனர். இவ்வாறு பாமக மாநில பொருளாளர் திலகபாமா செய்தியாளர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad