தேனி அரசுப் பேருந்தில் மது போதையில் பயணித்த பெண் ரகளையில் ஈடுபட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் குமுளியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து பெரியகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தேனியில் ஏறிய ஒரு பெண் பயணி குடி போதையில் சக பயணிகளுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பேருந்தில் பயணித்த சக பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை பேருந்திலிருந்து இறக்கி காவல் நிலையத்தில் ஒப்படைக்க வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் பெரியகுளம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.பேருந்து பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தபோது பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர் பேருந்தில் ஏறி பார்த்த போது, ஆடைகள் அலங்கோலமான நிலையில் இருந்த அந்தப் பெண் சக பயணிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை பேருந்திலிருந்து இறங்குமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு அந்தப் பெண் உடன்படாமல் காவல்துறையினரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். உடைகளை சரி செய்த காவல்துறையினர் ஆட்டோவில் ஏற்றி அந்த பெண்ணை பெரியகுளம் காவல் நிலையம் கொண்டு சென்றனர் அப்போது அந்தப் பெண்ணை விசாரிக்க முயன்றபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதுடன், தன்னுடைய பெயரைக் கூட சொல்ல முடியாத நிலையில் குடிபோதையில் உளறி உள்ளார்.
நள்ளிரவு நேரத்தில் பெண்ணை தனியாக அனுப்ப முடியாது என்பதால் அப்பெண்ணை பெரியகுளத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி ஒப்படைத்தார்.
சமீபத்தில் பள்ளிச் சீருடை அணிந்த சிறுமிகள் அரசுப் பேருந்தில் மது அருந்துவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நடுத்தர வயது பெண்மணி ஒருவர் அரசு பேருந்தில் குடிபோதையில் ஏறி, சக பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் மதுவால் தமிழகம் மேலும் சீரழிவு பாதைக்குச் சென்று கொண்டுள்ளது என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment