பிரீமியம் கார்களில் இடம்பெறும் ADAS வசதி பைக்குகளில் அறிமுகம் செய்ய MINDA நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கென தனியாக RIDE VISION நிறுவனத்துடன் இணைந்து இந்த வகை டெக்னாலஜியை உருவாக்கவுள்ளது.IRAS எனப்படும் புதிய டெக்னாலஜி மூலம் இந்திய பைக்குகளை ஏற்றார் போல வடிவமைத்து இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற குறைந்த விலையில் வழங்கவுள்ளது. இதனால் இதன் அறிமுகத்திற்கு பிறகு இந்த டெக்னாலஜி மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெக்னாலஜி பற்றிய முழு தகவலையும் இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் இரு சக்கர வாகனங்களுக்கு பாகங்கள் உற்பத்தி செய்து வரும் MINDA கார்ப்பரேஷன் நிறுவனம் இஸ்ரேல் நாட்டின் RIDE VISION எனப்படும் நிறுவனத்துடன் இணைந்து இந்த ADAS வசதி கொண்ட டெக்னாலஜியை வழங்கவுள்ளது.
இந்த இஸ்ரேல் நிறுவனம் பைக்குகளில் RIDER அஸ்சிஸ்ட் போன்ற வசதிகளை வழங்கிவரும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்துடன் இணைந்து AI டெக்னாலஜி மூலம் COLLISION AVOIDANCE TECHNOLOGY (CAT) என்கிற டெக்னாலஜியை இந்தியாவில் வழங்கவுள்ளது.
இந்த டெக்னாலஜி இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் வழங்கவுள்ளது. இதனால் உலகின் நம்பர் 1 இரு சக்கர வாகன இந்தியாவில் பைக் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கும். திட்டத்தை இந்த நிறுவனங்கள் கையில் எடுக்க முக்கிய காரணம் இந்தியாவில் வருடம்தோறும் நடக்கும் சாலை விபத்துகளில் 65% இரு சக்கர வாகனங்களே உள்ளன. இதற்காக இந்த IRAS டெக்னாலஜி மூலம் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.
ஆனால் இந்த டெக்னாலஜி முதல்கட்டமாக 200சிசி வாகனங்களுக்கு மேல் உள்ள பிரீமியம் பைக்குகளுக்கு இந்த டெக்னாலஜி வழங்கப்படும் என்று தெரிகிறது. இதன் இரண்டாம் கட்டமாக குறைந்த விலையில் இந்த டெக்னாலஜியை சிறிய இரு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
டெக்னாலஜி விவரம்
ADAS BIKES CAMERA
இந்த IRAS டெக்னாலஜி மூலம் பைக்கின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் கேமரா, சென்சார், ஸ்பீட் சென்சார், GPS, ECU போன்ற கார்களில் பயன்படுத்தும் அனைத்து அம்சங்களும் இடம்பெறும் என்று தெரிகிறது. இந்த டெக்னாலஜியில் மேலும் முன்பக்க COLLISION அலெர்ட், பிளைண்ட் ஸ்பாட் அலெர்ட், DANGEROUS ஓவர்டேக் அலெர்ட் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த MINDA நிறுவனத்தின் ADAS வசதி தற்போது மூன்று செக்மென்ட்களில் டெஸ்டிங் செய்யப்பட்டுவருகிறது. இந்த செக்மென்ட் அனைத்தும் 300 சிசி மேல் உள்ள பைக்குகள் ஆகும். இந்த டெக்னாலஜி ஒரு பைக்கில் இருந்தால் அந்த பைக்கின் விலை அதிகபட்சமாக 3 அல்லது 4 % மட்டுமே அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ADAS BIKES SIDE
மேலும் இந்த பைக்குகளில் கேமரா வசதி பொறுத்தப்பட்டுள்ளதால் இந்த கேமரா எந்நேரமும் பைக்கை ரெகார்ட் செய்துகொண்டிருக்கும். இதன் மூலம் விபத்துக்களையும், இன்சூரன்ஸ் போன்றவற்றையும் கண்காணிக்க முடியும். இந்த வகை டெக்னாலஜி கார்களில் மட்டுமே இருப்பதால் பைக்குகளில் இடம்பெறுவது பெரும் உதவியாக இருக்கும். மேலும் பைக்குகள் பாதுகாப்பு வசதி பல மடங்கு அதிகரிக்கும்.
இந்த ADAS டெக்னாலஜி எவ்வாறு கார்களில் டிரைவர்களுக்கு உதவியாக இருக்கிறதோ அதேபோல பைக்குகளில் டிரைவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். இந்தியாவின் மிகப்பெரிய சந்தையான இரு சக்கர வாகன சந்தை இவ்வாறு ஒரு பாதுகாப்பு அம்சம் இடம்பெறுவது பாதுகாப்பு தரத்தை அதிகரிக்கும்.
No comments:
Post a Comment