இந்தியாவில் தற்போது பல ஹைபிரிட் டெக்னாலஜி கொண்ட கார்கள் அறிமுகமாகின்றன. இந்த கார்கள் அனைத்தும் இரண்டு வகை பவர் கொண்டு இயங்குகின்றன. தற்போது எலக்ட்ரிக் கார்களின் மோகம் உள்ளதால் புதிதாக உள்ள இந்த ஹைபிரிட் டெக்னாலஜி எல்லா நிறுவனங்களும் தொடங்கிவிட்டன. இந்த ஹைபிரிட் டெக்னாலஜி பல வகைகளில் உள்ளது. இந்த பதிவில் நாம் ஹைபிரிட் கார்கள் என்றால் என்ன அதன் வகைகளை பற்றிய தெளிவான விளக்கத்தை இந்த பதிவின் மூலம் காணலாம்.
தற்போது உள்ள காலகட்டம் முன்பு போல இல்லை. ஏனென்றால் பெட்ரோல் அல்லது டீசல் என இரண்டு வாகனங்கள் மட்டுமே சந்தையில் இருந்துவந்தது. மக்களும் இந்த இரு வானங்களை மட்டுமே மாறி மாறி வாங்கிவந்தனர்.
ஆனால் இப்போது பல மக்கள் பெட்ரோல் கார்களை விட ஹைபிரிட் கார்களையே அதிகம் வாங்குகிறார்கள். இந்த வகை வாகனங்களை மக்கள் அதிகம் வாங்குவதால் ஹைபிரிட் டெக்னாலஜி முறை பல வழிகளில் மேம்பாட்டு வருகிறது.
ஹைபிரிட் கார்கள் என்றால் என்ன?
ஹைபிரிட் டெக்னாலஜி கார்கள் என்றால் என்ன என்ற கேள்வி பலரிடம் உள்ளது. இதற்கான சரியான விடை என்னவென்றால் ICE எனப்படும் இன்டெர்னல் கம்பஷன் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டும் கலந்த ஒரு காரையே ஹைபிரிட் கார் என்று அழைப்பார்கள்.
இந்த கார்களில் பெட்ரோல் கொண்டும் எலக்ட்ரிக் பவர் கொண்டும் காரை ஓட்ட முடியும். தற்போது அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்த ஹைபிரிட் டெக்னாலஜியை பயன்படுத்தத்தொடங்கிவிட்டன. ஆனால் இதில் பல வகைகள் உள்ளன.
MILD HYBRID
இது ஒரு சராசரி ஹைபிரிட் டெக்னாலஜி ஆகும். இந்த கார்களில் ஸ்டார்டர் மோட்டார் பதிலாக ஸ்டார்டர் ஜெனெரேட்டர் இருக்கும். இந்த வகை மோட்டார் இயங்கி கார்களின் என்ஜின் மட்டுமே உற்பத்தி செய்யும் திறனை இவையும் கூட சேர்ந்து உற்பத்தி செய்யும் இதனால் காரின் மைலேஜ் அதிகரிக்கும்.
SERIES HYBRID
இந்த கார்களில் பேட்டரி மற்றும் மோட்டார் சற்று பெரியதாக இருக்கும். மைல்டு ஹைபிரிட் கார்களை விட இந்த கார்களின் மைலேஜ் மிக அதிகமாக கிடைக்கும். இந்த கார்களில் உள்ள மோட்டார் கார்களை குறைந்த வேகத்திலும் குறைந்த தூரத்திற்கு இயக்க உதவும். அதிக தூரம் அல்லது அதிக வேகம் செல்லவேண்டுமானால் நாம் ICE என்ஜின் பயன்படுத்தலாம்.
PLUG IN HYBRID
இந்த வகை கார்களில் பேட்டரி மிகவும் பெரியதாக இருக்கும். மேலும் இந்த பேட்டரி நாம் தனியாக சார்ஜ் செய்யவேண்டும். ஆனால் இந்த கார்களில் நாம் பேட்டரி மூலம் தொலைதூரம் செல்லமுடியும். இந்த வகை டெக்னாலஜி குறைந்த மாசு ஏற்படுத்தும் ஹைபிரிட் டெக்னாலஜி ஆகும். இந்த வகையி டெக்னாலஜி பல சொகுசு கார்களில் இடம்பெற்றுள்ள.
RANGE EXTENDER ELECTRIC
இந்த வகை டெக்னாலஜி என்ஜின் வேலை செய்ய தேவையில்லை. ஏனென்றால் இந்த டெக்னாலஜி மூலம் என்ஜின் பவர் பேட்டரி சார்ஜ் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த டெக்னாலஜியில் பேட்டரி சார்ஜ் குறைந்தவுடன் என்ஜின் மூலம் மீண்டும் பேட்டரி சார்ஜ் செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment