தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் நடைபெறுகின்றன.
நீட் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு சிம்மசொப்பனமாக திகழும் முதல்வர் ஸ்டாலின்!
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வும் நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்ந்து பேசி வந்தார். பொதுத் தேர்வு அட்டவணை வெளியாவது தொடர்ந்து தள்ளிப்போய் வந்தது. இந்நிலையில்
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் பொதுத் தேர்வுக்கான அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. மே 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி நிறைவடையும்.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 9 ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி நிறைவடையும்.
திமுக அமைச்சர்களை குறிவைக்கும் டெல்லி: யார் யாருக்கு சிக்கல்?
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி நிறைவடையும்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதி வெளியாகும், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 20ஆம் தேதி முதல் அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment