கோயில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு.... ஐகோர்ட் அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 3, 2022

கோயில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு.... ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக விளம்பர பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

கோவில்களுக்கு வரும் பிற மதத்தவர்கள் முறையாக ஆடை அணிவதில்லை என்பதால், கோவிலின் புனிதத்தை காக்கும் வகையில், ஆடைக்கட்டுப்பாடு விதித்து, கோவில்கள் முன் விளம்பர பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும் எனவும், பிற மதத்தவர்களை கோவிலில் அனுமதிக்க கூடாது எனவும் கோரி, திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆடைக் கட்டுப்பாடு அமலில் உள்ள கோவில்களில் அதுபோன்ற பலகைகள் வைக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், சில புகைப்படங்களை தாக்கல் செய்து, இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் முறையற்ற வகையில் ஆடைகளை அணிந்து செல்வதாக குற்றம்சாட்டினார். ஒவ்வொரு கோவில்களிலும் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என உத்தரவிட்டால்போதும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி அமர்வு, ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆடை கட்டுப்பாடுகள் உள்ளது என்பதால், ஆடை கட்டுப்பாட்டு அமலில் உள்ள கோவில்களில் மட்டும் விளம்பர பலகைகளை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
அதேசமயம் அனைத்து கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடு குறித்த பலகைகள் வைக்க வேண்டுமென பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், கோவில்களுக்கு பக்தர்கள் முறையாக ஆடை அணிந்து வரவேண்டும் என்றும், இதை கோவில் நிர்வாகங்கள் முறைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad