ஐசிஐசிஐ ப்ரெடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் (ICICI Prudential Mutual Fund) ஹவுசிங் ஆப்பர்ச்சுனிட்டீஸ் ஃபண்ட் (Housing Opportunities Fund) எனும் புதிய ஃபண்டை அறிமுகப்படுத்தவுள்ளது.
ஐசிஐசிஐ ப்ரெடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் வெளியிட்டுள்ள இந்த புதிய ஃபண்டானது ஒரு ஓபன் – எண்ட் ஈக்விட்டி திட்டமாகும். மேலும் இந்த ஃபண்டானது ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட ஈக்விட்டி பங்குகளிலும், ஈக்விட்டி கருவிகளிலும் முதலீடு செய்யப்படும்.
புதிய ஃபண்ட் ஆஃபருக்கான சந்தா மார்ச் 28 அன்று துவங்குகிறது மற்றும் ஏப்ரல் 11 அன்று சந்தா செலுத்தும் தேதி முடிவடைகிறது. இந்த ஃபண்டிற்கான குறைந்தபட்ச சந்தா ரூ. 5,000 ஆகும். இந்தத் திட்டம் நிஃப்டி ஹவுசிங் இன்டெக்ஸின் ஒரு பகுதியாக இருக்கும். மேலும் தகுதியான தொழில்களில் முதலீடு செய்யும்.
வீட்டை அமைக்க முக்கியமாக இருக்கும் கருவிகளான சிமெண்ட், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், வீட்டு நிதி/ ஹவுசிங் பினான்ஸ், வங்கிகள், மின்சாரம், எஃகு, எல்பிஜி/சிஎன்ஜி/பிஎன்ஜி/எல்என்ஜி சப்ளையர்கள் போன்ற பல்வேறு துறைகளை இத்திட்டம் முதலீடுகளுக்காக தேர்ந்தெடுத்துள்ளது.
மேலும் 2008 – 2012 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் விநியோகமானது அதிகமாக வளர்ச்சி கண்டது. அதே நிலை தற்போதும் உள்ளதால் இந்த ஃபண்டானது நல்ல வருமானத்தை தரும் என ஐசிஐசிஐ எம்.எஃப் நம்புகிறது. இத்திட்டத்தின் நிதி மேலாளர்களாக எஸ் நரேன் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் இருப்பார்கள்.
அதுமட்டுமின்றி இந்தியாவில் நகர்ப்புறங்களில் வாழ்வோரின் எண்ணிக்கை 2025 இல் 525 மில்லியனாகவும், 2036 இல் 600 மில்லியனாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை 2030ல் 1 டிரில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் ஏஎம்சியின் தயாரிப்பு மேம்பாடு மற்றும் வியூகத்தின் தலைவர் சிந்தன் ஹரியா வீடு என்பது ஒரு வலுவான சுழற்சியின் உச்சத்தில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் சாதகமான மக்கள்தொகை, வளர்ந்து வரும் நடுத்தர மக்கள் தொகை , அதிகரித்த நகரமயமாக்கல், சிறந்த மலிவான மற்றும் குறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் வீட்டுவசதிக்கு உகந்த சூழலை உருவாக்குகின்றன எனக் கூறியுள்ளார்.
அதனால் ரியல் எஸ்டேட் சம்பந்தப்ப்ட்ட முதலீட்டில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இத்திட்டம் ஏற்றது என சிந்தன் ஹரியா இந்த புதிய ஃபண்டிற்கான அறிமுகத்தின்போது கூறியுள்ளார்.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
No comments:
Post a Comment