பென்சனுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 21, 2022

பென்சனுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!!

பென்சனுக்கு பிளான் பண்ண பல சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் உங்களின் ரிட்டயர்மெண்டுக்கான பணத்தை சேமிக்க முடியும்.

பென்சனுக்கு பிளான் பண்ண பல சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் உங்களின் ரிட்டயர்மெண்டுக்கான பணத்தை சேமிக்க முடியும்.
ஓய்வூதியத்தைத் திட்டமிடும் போது நினைவுக்கு வரும் காப்பீட்டு நிறுவனங்களின் ஓய்வூதியத் திட்டங்கள், தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) சேமிப்புகள்தான் நினைவிற்கு வரும்.

உங்களில் பலர் ஓய்வூதியத்திற்கான போதுமான திட்டங்களைக் கூட உருவாக்காமல், மகள்கள் மற்றும் மகன்களை நம்பியிருக்கலாம். இருப்பினும், உங்கள் பணத்தில் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க நீங்கள் நினைக்கவில்லை வேண்டும்.

அதற்கு மியூச்சுவல் ஃபண்டுகளும் உங்களின் ஓய்வு காலத்திற்கான சிறந்த முதலீட்டு கருவிகளில் ஒன்றாக இருக்கும். எவ்வளவு சீக்கிரம் நீங்கள் ஓய்வுபெறுவதற்குச் சேமிக்கத் தொடங்குகிறீர்களோ, அதற்கேற்ப அதிகமான கார்பஸ் உங்களுக்கு கிடைக்கும்.

ஓய்வூதியத்தை இலக்காகக் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அதிக இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் அதிக வருமானத்தை உருவாக்குவதற்கு வழக்கமான ஈக்விட்டி, டெட் அல்லது ஹைப்ரிட் ஃபண்டுகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
டாப் 5 மியூச்சுவல் ஃபண்ட் பென்சன் திட்டங்கள்:

25 முதல் 40 வயதிற்குட்பட்ட முதலீட்டாளர்களுக்கு உகந்தது.

1. ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஸமால் அண்ட் மிட்கேப் ஃபண்ட் (Aditya Birla Sun Life Small and Midcap Fund – Growth)
2. கனரா ரோபேக்கோ எமர்ஜிங் ஈக்விட்டீஸ் (Canara Robeco Emerging Equities – Growth)
3. ஃபிராங்க்ளின் இந்தியா ப்ரிமா பிளஸ் (Franklin India Prima Plus – Growth)
4. ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்ட் ஃபண்ட் (HDFC Balanced Fund – Growth)
5. மிரே அசெட் எமர்ஜிங் ப்ளூசிப் ஃபண்ட் (Mirae Asset Emerging Bluechip Fund – Growth)
mutual fund
மேலே சொன்ன ஃபண்ட் நிறுவனங்களின் திட்டங்களில் நீங்கள் மாதம் ரூ. 10,000 முதலீடு செய்து வந்தால் 5 வருட முடிவில் அவை ரூ. 10 இலட்சம் முதல் ரூ. 13 இலட்சம் வரை உங்களுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் எனக் அதன் தரவுகள் கூறுகின்றன.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

No comments:

Post a Comment

Post Top Ad