சபையில் கெத்து காட்டிய கனிமொழி... அமைச்சர் டோட்டல் சரண்டர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 16, 2022

சபையில் கெத்து காட்டிய கனிமொழி... அமைச்சர் டோட்டல் சரண்டர்!

மொழி பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரை பார்த்து திமுக எம்பி கனிமொழி கேட்ட கேள்வியும், அதனை தொடர்ந்து சபையில் நிகழ்ந்த சுவாரஸ்மான சம்பவமும் தற்போது வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு முறை நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதும் தமிழக எம்பிக்கள் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்புவதும், அதற்கு மத்திய அமைச்சர்கள் ஹிந்தியில் பதிலளிப்பதும் பாஜக ஆட்சியில் தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. அப்படியொரு சம்பவம்தான் நாடாளுமன்றத்தில் இன்று அரங்கேறியது.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறை தொடர்பாக திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.

'ரேஷன் என்பது மாநில சார்ந்த விவகாரம். தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்தின்கீழ் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு எப்படி பொருளை வழங்குவது. அதற்கான செலவை யார் ஏற்பது' என்று கனிமொழி கேட்டார்.

அவரது கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஹிந்தியில் பதில் அளிக்க தொடங்கி\னார். அப்போது குறுக்கிட கனிமொழி, '.நான் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினேன்; நீங்கள் ஹிந்தியில் பதிலளிக்கிறீர்கள்.
உங்களுக்குத்தான் ஆங்கிலம் நன்றாக தெரியும்தானே... அதிலேயே பேசினால் எல்லோருக்கும் புரியுமே... ஆனால் நீங்கள் ஹிந்தியில் பதிலளித்தால், கேள்வி கேட்ட எனக்கு அது எப்படி புரியும்? என்று அமைச்சரை பார்த்து கொஞ்சம் காட்டமாக கேட்டார்.

உடனே அமைச்சர் பியூஷ் கோயல், சகோதரி கனிமொழியை நான் மிகவும் மதிக்கிறேன். எனவே அவர் கேட்டு கொண்டப்படி, ஆங்கிலத்திலேயே பதிலளிக்கிறன் என்ற அமைச்சர், "ஒரே ரேஷன் திட்டத்தின்கீழ் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கான நிதியை 100 சதவீதம் மத்திய அரசே ஏற்கும்.

இத்திட்டத்தில் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பயனாளிகள் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம். ஒரு மாதத்தில் வாங்காமல் போன நிலுவை பொருட்களை பயனாளிகள் அடுத்த மாதம் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்" என்று அமைச்சர் விளக்கம் அளித்தார்.
கடந்த முறை தமிழ்நாட்டிற்கு வர கூடிய அந்நிய முதலீடு குறித்து விளங்கும்படி மதிமுக எம்பி கணேஷ் மூர்த்தி கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஹிந்தியில பதிலளித்தார். அவர் பேசியது புரியாததால் ஆங்கிலத்தில் பேசும்படி கணேஷ மூர்த்தி கூறினார்.

அதற்கு அவையில் மொழிபெயர்ப்பு வசதி உள்ளது என்று அசால்ட்டாக சொன்ன பியூஷ் கோயல், இன்று கனிமொழி ஆங்கிலத்தில் பேசும்படி பணித்ததும், அவரது வேண்டுகோளுக்கு பணிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad