கோவையில் பறக்கும் எஸ்.பி. வேலுமணி கொடி... அப்போப்போ ஆட்டி செல்லும் திமுக - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 15, 2022

கோவையில் பறக்கும் எஸ்.பி. வேலுமணி கொடி... அப்போப்போ ஆட்டி செல்லும் திமுக

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் நடக்கும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை குறித்து வலைத்தளங்களில் உலாவும் பேச்சுக்கள்

திமுக ஆட்சி அமைத்த பிறகு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் இரண்டாவது முறையாக இன்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துகிறது. வழக்கம்போல அவரது வீட்டுக்கு முன்னால் குவிந்த ஆதரவாளர்கள் காலை உணவை முடித்துவிட்டு ரோஸ் மில்க்கை ருசி பார்த்தனர். ''ஏற்கனவே நடந்த சோதனையில் எந்த நடவடிக்கையும் எஸ்.பி. வேலுமணி மீது எடுக்காத இந்த திமுக அரசு, திரும்பவும் சோதனை அம்புவை வீசுவது வெத்து வீராப்புக்கா'? என்று சகித்து கொள்கின்றனர் அரசியல் பேசுபவர்கள்.
மேலும், ''முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியை தொடர்ந்து திமுக அரசு டார்கெட் செய்வதால், என்ன நடக்கப்போகிறது? இதற்கு முன்னதாக நடந்த சோதனையிலேயே ஒன்றும் வெளிவரவில்லை. இப்போது மீண்டும் சோதனை நடத்தி என்ன நடக்கப்போகிறது? கோடநாடு வழக்கில் கூட இதுவரை முன்னேற்றம் இல்லை... முக்கியமாக ஜெயலலிதா மரணத்தில் மர்ம இருப்பதாக பிரச்சார மேடைகளில் நின்று பேசி அதிமுக ஆதரவாளர்களையும் கன்பியூஸ் செய்தார்கள்... அதற்கான நடவடிக்கை தான் என்ன..? சம்மந்தப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்''? என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைக்கின்றனர் வலைதள வாசிகள். அப்படியான கேள்விகளை கேட்பதால் அவர்கள் அனைவரும் அதிமுக விசுவாசிகள் என்று சொல்லிவிட்டு கடந்துவிட முடியாது.
அத்துடன், '' கோவைக்கு மிகப்பெரிய சக்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி என்பது திமுகவினரால் மறுக்க முடியாத உண்மை. அது தற்போதுள்ள அமைச்சர்களுக்கும் தெரியும். அதை உடைப்பதற்காகதான் இதுபோன்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்'' என்று எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன் இன்று பகிரங்கமாக பேட்டி கொடுத்துள்ளார்.

மேலும், ''அதிமுக ஆட்சியின்போது நடந்த கொலை, கொள்ளை என்று சட்டசபையில் முதல்வர் நிறைய பேசியபோதும், நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் நேரம் பெற்றுக்கொண்டு இருக்கிறார் என்றும் இந்த அரசு வாய்சவடால் அரசு என்று சொல்லும் அளவுக்கு தான் செயல்படுகிறது'' என்று நம்மிடம் பேசிய நடுநிலையாளர் ஒருவர் புலம்பினார்.
எதுக்கு இந்த வெத்து சோதனை..? சரி சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் கிடைத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சம்மந்தப்பட்டவரை கைது செய்யலாம்... அப்படி இல்லையென்றால் அதற்கான நேரத்திற்கு காத்திருக்கலாம்... இப்படி டம்மி சோதனை செய்வதாலேயே ஆளுங்கட்சியின் ஆளுமையை நிரூபிக்க முடியுமா என்ன? என்று எஸ்.பி. வேலுமணி ரெய்டு ஆபரேஷனை குறித்து தமிழக அரசுக்கு எதிராக விமர்சனங்கள் இருக்கின்றன. அட, அப்போ கடைசி வர சோதனை மட்டும்தான் நடக்குமாங்க என்று கேட்டால், சோதனையும் நடக்கும் அதுக்கு அப்புறம் முதல் தகவல் அறிக்கையில் சில தகவல்கள் வெளியாகும் அவ்ளோதான்....

No comments:

Post a Comment

Post Top Ad