இருளர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை அவர்களுக்கு தமிழக அரசு வழங்கி உள்ளது.
இருளர்கள் பாம்புகளை பிடித்து அவற்றின் விஷத்தை எடுத்து ஜாடியில் அடைத்து மருந்து கம்பெனிகளுக்கு விற்பனை செய்வோர் வன உயிரின சட்டப்படி அரசிடம் இதற்கு அனுமதி பெற வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு அரசு உரிமம் வழங்கும். ஆனால், இதற்கு வனத் துறை அனுமதி வழங்காத காரணத்தால் நூற்றுக்கணக்கான இருளர் இனமக்களின் வாழ்வாதாரம் முடங்கி போய் உள்ளது.
தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வழக்கம் போல் உரிமம் வழங்க வேண்டும் என்று இருளர் இனமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை தமிழக அரசு தற்போது வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நிதியாண்டில் மொத்தம் 5 ஆயிரம் பாம்புகளை பிடிக்கவும், அவற்றின் விஷத்தை விற்கவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விஷ முறிவு மருந்து தயாரிக்க நல்ல பாம்பு, சுருட்டை பாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன் ஆகிய இனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றில் கண்ணாடி விரியன் பாம்பின் விஷம்தான் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதன் விஷம் ஒரு கிராம் 60 ஆயிரம் ரூபாய்க்கும், நாகப்பாம்பின் விஷம் 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் பாம்புகள் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் இருளர் இன மக்களுக்கு பாம்புகளை பிடிக்கவும், அவற்றின் விஷத்தை விற்பதற்கும் தமிழக அரசு ஆண்டுதோறும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, இருளர்கள் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கம், சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் செயல்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment