தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்... காரணம் இதுதான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, March 22, 2022

தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்... காரணம் இதுதான்!

இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை தமிழர்கள் மீண்டும் தமிழகத்தை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

கொரோனா காரணமாக சுற்றுலா துறை வீழ்ச்சி அடைந்துள்ளதால், இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இதன் விளைவாக இலங்கை அரசிடம் அன்னிய செலாவணி கையிருப்பு கரைந்துள்ளதால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகிறது. இதனால் அங்கு நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின விலையும் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ அரிசியின் விலை இலங்கை ரூபாய் மதி்ப்பில் 448, ஒரு லிட்டர் பால் 263 ரூபாய்க்கும் லிற்கப்படுகிறது. இதேபோன்று கோதுமை மாவு, சர்க்கரை, பருப்பு என அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அன்றாட பொருட்களின் விலைதான் இப்படியென்றால், ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
விலைவாசி உயர்வால் அரிசி ,கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்துவரும் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர தொங்கியுள்ளனர், இப்படி அயல் நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் இலங்கை தமிழர்களின் முதல் சாய்ஸ் தமிழ்நாடாகதான் உள்ளது.

இந்த வகையில். தனுஷ்கோடியை அடுத்த 3 ஆம் தீடை பகுதியில் 6 நபர்கள் சந்தேகப்படும்படியாக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கடலோர காவல்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் வர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்குள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. போலீசார் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த சில நாட்களில் 2000 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து, கடலோர காவல் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad