பக்கிங்ஹாம் கால்வாயில் குப்பைகள்: நிலைமையை அறிய ஆணையரை நியமித்த நீதிமன்றம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 9, 2022

பக்கிங்ஹாம் கால்வாயில் குப்பைகள்: நிலைமையை அறிய ஆணையரை நியமித்த நீதிமன்றம்!

மாமல்லபுரத்தில், பக்கிங்ஹாம் கால்வாய் அருகே அமைந்துள்ள குப்பை பிரிக்கும் பகுதியின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய நீதிமன்ற ஆணையரை நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு, கால்வாய் பகுதி குப்பை பிரிக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என தனேஜா வீட்டுமனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், மாசு கட்டுப்பாட்டு சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி, குப்பை பிரிக்கும் பகுதி அமைக்காதது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் மட்டுமே அனுப்பியது. ஆனால் அதன்பின்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பயோ - மைனிங் செயல்முறை திட்டம் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளதால், மூன்று மாதங்களில் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படும் என பேரூராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஓட்டல்கள், ஓய்வு விடுதிகள் குப்பைகளை கொட்ட அனுமதிக்கும் மாமல்லபுரம் பேரூராட்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள், குப்பைக் கிடங்கின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய பெண் வழக்கறிஞர் என்.டி. நானே என்பவரை நீதிமன்ற ஆணையராக நியமித்து உத்தரவிட்டனர்.
அவர் குப்பை பிரிக்கும் இடத்திற்கு மார்ச் 9 நேரில் சென்று ஆய்வு செய்து, குப்பை பிரிக்கும் பகுதியின் தற்போதைய நிலை, கால்வாயில் இருந்து எவ்வளவு தூரத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad