நடிகை நயன்தாராவை மேயர் பிரியா ராஜன் சந்தித்தார்
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், பிரபல நடிகை நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரியா ராஜன் வெற்றி
நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக சார்பில், சென்னை மாநகராட்சியின் 74வது வார்டில் போட்டியிட்ட திருவிக நகரைச் சேர்ந்த பிரியா ராஜன் வெற்றி பெற்றார். சென்னை மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததால், 28 வயதாகும் பிரியா ராஜனை அப்பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்தார்.
மேயராக பதவி ஏற்பு
இதை அடுத்து சென்னை மாநகராட்சியின் மேயராக சில நாட்களுக்கு முன்பு பிரியா ராஜன் பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை மாநகராட்சி மேயராக பதவி ஏற்கும் மூன்றாவது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளம் வயது மேயர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
நயன்தாராவுடன் திடீர் சந்திப்பு
நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளியம்மாள் கோவிலில் சாமி தரிசனம் வந்தார். அப்போது அங்கு வந்த சென்னை மாநகராட்சி புதிய பெண் மேயர் பிரியா ராஜனை சந்தித்து பேசி, இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாராவுடன், சென்னை மேயர் பிரியா ராஜன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் இந்த புகைப்படம் உள்ளது
No comments:
Post a Comment