அரியலூர் பெண் காவல் உதவி ஆய்வாளர் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதை குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அரியலூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளர் விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கு பின்னால் சில மர்மங்கள் இருப்பதாக தகவல் கூறுகிறது.
அரியலூர் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் லட்சுமி பிரியா (30). இவர் கடந்த 5ம் தேதி முதல் 3 நாள் விடுப்பு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், லட்சுமி பிரியா லீவு எடுக்கப்போவதை உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாததால் டியூட்டிக்கு வந்தபோது அலைக்கழிக்கப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அவரை திருச்சியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளிக்கு மாற்றியுள்ளனர். இதனால் லட்சுமி பிரியா செடி கருகும் பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் லட்சுமி பிரியாவின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, திருச்சி கேஎம்சியில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே மாவட்ட நீதிபதி மருத்துவமனைக்கு சென்று லட்சுமி பிரியாவிடம் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் டியூட்டிக்கு சென்ற லட்சுமி பிரியாவை உயர் அதிகாரிகள், எஸ்பி ஆபிஸுக்கும், டிஎஸ்பி ஆபிஸுக்கும் அலைக்கழித்ததாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி பெண் காவல் உதவி ஆய்வாளர் பாலியல் டார்ச்சருக்கு ஆளானதாகவும் அதிர்ச்சி தகவல் கசிந்துள்ளது. தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டாமல் தீவிர சிகிச்சை பெற்று வரும் லட்சுமி பிரியா கண் முழித்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரிய வரும்.
No comments:
Post a Comment