ரிப்போர்ட் கேட்ட அமைச்சர் மா.சு - கலக்கத்தில் அதிகாரிகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, March 25, 2022

ரிப்போர்ட் கேட்ட அமைச்சர் மா.சு - கலக்கத்தில் அதிகாரிகள்!

உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கான மாநில அளவிலான பயிலரங்கம் தொடங்கியது

உணவு பாதுகாப்புத் துறையை தொடர்ந்து கவனித்து வருவதாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கான மாநில அளவிலான பயிலரங்கத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
உணவு பாதுகாப்பு துறையை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். உபரி உணவை தொண்டு நிறுவனங்கள் மூலம் வினியோகிப்பதில், தமிழகம் முழுவதும், 38 மாவட்டங்களில், 15,845 நிகழ்வுகள் உணவு பாதுகாப்பு துறை மூலம் நடைபெற்றுள்ளது. பேரிடர் காலத்தில் எவ்வளவோ நபர்கள் உணவு இல்லாமல் தவித்தனர்.
ஒரு மணி நேரத்தில் தன்னால் சென்னையில் 15,000 இடங்களில் உணவு அளிக்க முடியும். அலுவலர்கள் முறையாக செயல்பட்டிருந்தால் லட்சக் கணக்கில் நிகழ்வுகள் நடத்தி கோடிக் கணக்கான நபர்கள் பயன் பெற்றிருப்பார்கள்.

சென்னையில் ஒரு கோயிலில் நுழைய முறையான கட்டணம் செலுத்தக் கூறியதால் கோபமடைந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி அருகில் உள்ள சிறிய பிரசாதக் கடைகளில் ரெய்டு நடத்தி 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான பிரசாதம் இருப்பதாக கண்டுபிடித்து, ஊடகங்களுக்கு செய்தியும் கொடுத்துள்ளார். சிறிய பெட்டி கடைகளில் எப்படி 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருக்கும்? யார் சீல் வைத்தார்கள் என உங்களுக்கு தெரியும். உண்மையாகவே தவறு நடக்கும் இடத்தில் சீல் வைத்திருந்தால் பாராட்டலாம்.
உணவு பாதுகாப்புத் துறை 91 டன் குட்கா மட்டுமே பறிமுதல் செய்துள்ளது. ஆனால் காவல் துறையினர் 400 டன் குட்கா பறிமுதல் செய்துள்ளனர். உணவு பாதுகாப்புத் துறையினர் கண்களில் மண்ணை தூவி சென்றவர்களை தான் காவல் துறையினர் பிடித்துள்ளனர். 400 டன்னை உணவு பாதுகாப்புத் துறை பிடித்திருந்தால் பாராட்டியிருக்கலாம். எனவே, உணவு பாதுகாப்புத் துறையினர் மேலும் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலரிடம் கேள்வி எழுப்பிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேனி மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் எவ்வளவு பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் பெறப்பட்டுள்ளது என்றும், உணவு வினியோகத்தில் எவ்வளவு தொண்டு நிறுவனங்களை இணைத்து செயலாற்றி உள்ளீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் தெரியாமல் தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி திணறிப் போய் நின்றார். உடனடியாக பட்டியல் தயார் செய்து வழங்க அவருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
உணவு பாதுகாப்பு துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 379 திருக்கோவில்களில் தரமான பிரசாதம் வழங்குவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல் துறையால் இதுவரை 491 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. நடவடிக்கை எடுக்கப்பட்ட 9 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1,241 கிலோ லிட்டர் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மறு சுழற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad