பேரதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்; சி.யு.இ.டி நுழைவுத்தேர்வு கட்டாயம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, March 25, 2022

பேரதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்; சி.யு.இ.டி நுழைவுத்தேர்வு கட்டாயம்!

பிளஸ் 2 முடித்து விட்டு இளங்கலை படிப்பில் சேர சியுஇடி நுழைவுத்தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு பள்ளி மாணவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு உருவாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தில்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களும், இளங்கலை படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க புதிய பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு (சியூஇடி) மதிப்பெண்களை பயன்படுத்த வேண்டும் என பல்கலைக் கழக மானிய குழு (யுஜிசி) கடந்த திங்கள்கிழமை கூறியது.

மாணவர்களின் பக்கம் இருந்து பார்த்தால் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு இந்த சியூஇடி அறிமுகம் பெரும் உதவியாக இருக்கும் என்பது பல்கலை கழக மானிய குழுவின் (யுஜிசி) கருத்தாக உள்ளது.

மேலும் பெரும்பாலான வாரிய தேர்வுகள் முடிவடைந்து இருக்கும் நிலையில், ஜூலை முதல் வாரத்தில் CUET தேர்வை நடத்த பல்கலைக் கழக மானியக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான விண்ணப்பம் செயல்முறை ஆன்லைனில் இருக்கும் என்றும், ஏப்ரல் முதல் வாரத்தில் இது தொடங்கும் என்றும் கூறி உள்ளதோடு கணினி அடிப்படையிலான தேர்வாகவும் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

அதே சமயம் மாணவர்கள் கணினியை பயன்படுத்துவதில் அதிக தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது இல்லை என்பதால் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமையே (என்டிஏ) நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி இதை கட்டாயமாக்கி இருப்பதோடு, நாடு முழுவதும் உள்ள இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு சியூஇடி மதிப்பெண்களை பயன்படுத்துமாறு அனைத்து மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.

தகுதியின் அடிப்படையில் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற எவரும் பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்கலாம். சியுஇடி-ன் பாடத்திட்டம் NCERTயின் 12ம் வகுப்பு மாதிரி பாடத் திட்டத்துடன் பிரதிபலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் சியூஇடி அடிப்படையில் இளங்கலை மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றாலும் அந்தந்த நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான தகுதியை தீர்மானிப்பதில் 12ம் வகுப்பு மதிப்பெண்களுக்கு குறைந்தபட்ச அளவுகோலை அமைக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதிய கல்வி கொள்கையின் கீழ் சியுஇடி என்னும் நுழைவு தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது மற்றும் மாணவ மாணவிகளுக்கு வழங்கக் கூடிய கல்வி உதவித் தொகை பாதியாக குறைக்கப்பட்டது, ஆகியவற்றை கண்டித்து நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad