பொது மக்கள் அச்சப்பட தேவை இல்லை என உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
கோடை காலத்தை முன்னிட்டு பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அச்சப்பட தேவை இல்லை என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில், நேசம் கல்வி மற்றும் சமூக நலன் அறக்கட்டளையை, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
கோடை காலம் துவங்கி இருக்கின்ற நிலையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு தடையின்றி வழங்கிட அரசி, பருப்பு உட்பட அனைத்து பொருட்களும் கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளது. கோடை காலத்தை முன்னிட்டு பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அச்சப்பட தேவை இல்லை.
தமிழ்நாடு முழுவதும் 19 ஆயிரத்து 500 தனிநபர் குடும்ப அட்டை பெற தகுதி உடையவர்களாக உள்ளனர். அவர்களுக்கு தனிநபர் குடும்ப அட்டை விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment