கொரோனா தடுப்பூசியால் பள்ளி மாணவிக்கு கை, கால் செயலிழப்பு? - ராதாகிருஷ்ணன் விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 10, 2022

கொரோனா தடுப்பூசியால் பள்ளி மாணவிக்கு கை, கால் செயலிழப்பு? - ராதாகிருஷ்ணன் விளக்கம்!

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள அரசு பள்ளி மாணவிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதால் தான் கை, கால்கள் செயல்திறன் பாதிப்பு குறைவு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் எள்ளுபாறை பகுதியை யோகலட்சுமி(17) சோளிங்கரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி 4-ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின்படி பள்ளியில் யோகலட்சுமிக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற யோகலட்சுமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அவரை உறவினர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவருக்கு திடீரென பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற மாவட்ட மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். பின்னர், மாவட்ட சுகாதார பணிகள் உதவி இயக்குனர் மணிமாறன் தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் கண் பார்வை பறிபோக வாய்ப்பில்லை என கூறினார்.
என் மகன் திரும்ப வந்துட்டான்; உருக்கத்துடன் அற்புதம்மாள் நன்றி !

மேலும், பெற்றோரின் வம்சாவளி மரபணு மாற்றத்தின் காரணமாக மாணவிக்கு கண் பார்வை திறன் பறிப்போகி இருக்கலாம் என சான்று வழங்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல கண் பிரிவு மருத்துவமனைக்கு யோகலட்சுமி சிகிச்சைக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், யோகலட்சுமி படித்து வரும் பள்ளியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மற்றொரு மாணவியான பிரியதர்ஷினி பிப்ரவரி 23-ஆம் தேதி காலை படுக்கையில் இருந்து எழுவதற்கு முற்பட்டபோது இரண்டு கால்களும் செயலிழந்து எழுந்து நிற்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.


அதனைத் தொடர்ந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மாணவி பிரியதர்ஷினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பிரியதர்ஷினியின் தந்தை பிரபு அப்பகுதி கவுன்சிலர் மற்றும் உறவினர்களுடன் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் உதவி கேட்டு முறையிட்டுள்ளர்.
பேருந்து பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!
இதனிடையே, மாணவிகள் யோகலட்சுமி மற்றும் பிரியதர்ஷினி ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய காரணத்தால் தான் உடல் உறுப்புகள் செயலிழப்பு ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது, குறித்து மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்த பிறகே தெரிய வரும் என மாநில சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad