தேர்தலில் காங்கிரஸ், பாஜக சார்பில் போட்டியிட்டு மூன்று தம்பதிகள் வெற்றி பெற்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
40 தொகுதிகளை கொண்ட கோவா மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது..
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மூன்று தம்பதிகல் வெற்றி பெற்றுள்ள சுவாரஸ்யமான சம்பவம் கோவாவில் நிகழ்ந்துள்ளது.
பாஜக அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் விஷ்வஜித் ரானே லால்போய் தொகுதியிலும், அவரது மனைவி திவ்யா போரியம் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களை போலவே, பாஜக வேட்பாளர் அடானசியோ மான்செரேட் பனாஜி தொகுதியிலும், அவரது மனைவி ஜெனிபர், தலெய்காவ் தொகுதியிலும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் மைக்கேல் லோபோ அவருக்கு பரீட்சையமான காலன்குட் தொகுதியிலும், அவரது மனைவி டெலிலா சியோலிம் தொகுதியில் வெற்றிக்கனியை பறித்துள்ளனர்.
பாஜக, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள இந்த மூன்று தம்பதிகளும் சட்டசபைக்கு செல்லும் சுவாரஸ்ய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment