கள்ளக்காதலனுடன் அடிக்கடி ஓட்டம் பிடிக்கும் மனைவி: மீட்டு தரக்கோரி கணவன் கண்ணீர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 24, 2022

கள்ளக்காதலனுடன் அடிக்கடி ஓட்டம் பிடிக்கும் மனைவி: மீட்டு தரக்கோரி கணவன் கண்ணீர்

கள்ளக்காதலுடன் மீண்டும் மீண்டும் ஓட்டம் பிடிக்கும் மனைவியை மீட்டுத்தரக் கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கணவன் கண்ணீருடன் மனு.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மரிக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வசந்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் வசந்திக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாச்சிக்காளைத்தேவர் என்பவரது மகன் முருகனுக்கும் திருமண உறவை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் குடும்ப உறவை வெறுத்துக்கொண்ட வசந்தி முருகனுடன் அடிக்கடி வெளியில் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். ஒருநாள், வசந்தி தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு முருகனுடன் ஊரை விட்டே சென்றுள்ளார்.

பின்னர் சில நாட்கள் கழித்து முருகன் வசந்தியின் இரண்டு குழந்தைகளையும் சொந்த ஊரில் கொண்டு வந்து விட்டு விட்டு மீண்டும் சென்று விட்டார் என்று சொல்லப்படுகிறது. வீட்டுக்கு திரும்பி வந்த இரு பிள்ளைகளின் உடலில் சிகரெட் மற்றும் காய்ச்சிய இரும்புக் கம்பியால் சூடு வைத்ததற்கான காயங்கள் இருந்ததைக் கண்டு தந்தை ஈஸ்வரன் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து குழந்தைகளிடம் விசாரித்தபோது, முருகன் தினம் தினம் பிள்ளைகளுக்கு மயக்க ஊசி போட்டு உறங்க வைத்துவிட்டு வசந்தியுடன் தொந்தரவு இன்றி உல்லாசமாக இருப்பார் என்பது தெரிய வந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 2ம் தேதி தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஈஸ்வரன் புகார் அளித்துள்ளார்.
அப்போது, காவல்துறையினர் வசந்தியை மீட்டு ஈஸ்வரனிடம் ஒப்படைத்தனர். ஆனால், அடுத்த சில தினங்களில் ஈஸ்வரி மீண்டும் முருகனுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். இந்த நிலையில், இன்று இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளீதரனிடம் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், தனது மனைவி வசந்தியை முருகன் என்பவர் கடத்திச்சென்று தொடர்ந்து போதை ஊசி போட்டு அவரின் ஆசைக்கு இணங்க வைப்பதாகவும், இதற்கு இடையூறாக இருந்த தனது மகனுக்கும் மயக்க ஊசி போட்டு உள்ளனர் என்றும் உடலில் பல இடங்களில் சூடு வைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வசந்தி உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை எனவும், தேனி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றும் ராஜேந்திரன் என்பவர், தன்னிடம் தொலைபேசியில் பேசி, பணம் வேண்டுமானால் வாங்கிக்கொள், உனது மனைவியை மறந்து விடு என்று மிரட்டல் விடுப்பதாகவும், எனது மனைவியை கடத்துவதற்கு உதவியாக இருந்த ரகு என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வசந்தியை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad