அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, March 4, 2022

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு விரைவில் மகிழ்ச்சியான செய்தி வெளியாக உள்ளது

மத்திய அரசு ஊழியர்களுக்கு பிட்மென்ட் தொகையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, 7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இரு முறை என இந்த ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு பரிசாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. மேலும், வீட்டு வாடகைப் படி உயர்வும் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பிட்மென்ட் தொகை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிட்மென்ட் உயர்வை, 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என, மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இது குறித்து முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாயில் இருந்து 26 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கக் கூடும். தற்போது உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக பிட்மென்ட் தொகை உயர்வு குறித்த அறிவிப்பு தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பு வெளியானால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 96 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கக் கூடும். இதனுடன், அகவிலைப்படி உயர்வும் அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad