'நா நல்ல பையன் கிடையாது'... கடிதம் எழுதிவிட்டு பள்ளி மாணவன் தற்கொலை..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 14, 2022

'நா நல்ல பையன் கிடையாது'... கடிதம் எழுதிவிட்டு பள்ளி மாணவன் தற்கொலை..!

திருச்சி அருகே பள்ளி மாணவன் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள வேங்கூர் ஊராட்சி சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் ராணிஅம்மாள். திருநங்கையாவர் இவர் மதன்குமார் (18) என்ற வாலிபரை சிறுகுழந்தையில் இருந்து தத்தெடுத்து வளர்த்து வந்தார். மதன்குமார் வேங்கூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வரமால் தொடர்ந்து விடுமுறை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராணியம்மாளை அழைத்து பள்ளி நிர்வாகம் கண்டித்துள்ளது.
மதன்குமாரை வீட்டிற்கு அழைத்து சென்று விசாரிக்கையில் அவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என கூறவே அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களாக மனம் உடைந்த நிலையில் இருந்த மதன்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஆய்வாளர் சந்திரமோகன் வழக்கு பதிவு செய்து மாணவர் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகிறார். மேலும், மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிய கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த கடிதத்தில் ''நா நல்ல பையன் கிடையாது. அதுபோல இந்த மரணத்திற்கு யாரும் வருத்தப்பட வேண்டாம் நன்றி'' என்று எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad