யுடிஐ மியூச்சுவல் ஃபண்ட் (UTI Mutual Fund) நிஃப்டி மிட்கேப் 150 குவாலிட்டி 50 இன்டெக்ஸ் ஃபண்டை (Nifty Midcap 150 Quality 50 Index Fund) அறிமுகப்படுத்தியுள்ளது.
யுடிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் நிஃப்டி மிட்கேப் 150 குவாலிட்டி 50 டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸ் (டிஆர்ஐ) - யுடிஐ நிஃப்டி மிட்கேப் 150 குவாலிட்டி 50 இன்டெக்ஸ் ஃபண்டைப் பிரதிபலிக்கும் ஒரு ஓபன் எண்டட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய ஃபண்டிற்கான ஆஃபர் சந்தா செலுதுகைகளுக்காக மார்ச் 29, 2022 அன்று திறக்க்ப்பட்டுள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி சந்தாவிற்கான காலம் முடிவடையும். இந்தத் திட்டம் வரும் மாதம் ஏப்ரல் 15 ஆம் தேதி மறுபடியும் சந்தா மற்றும் ரிடீம்களுக்காக திறக்கப்படும் என யுடிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் அறிவித்துள்ளது.
இந்த ஃபண்டிற்கான குறைந்தபட்ச ஆரம்ப முதலீடு ரூ. 5,000/- ஆகும். அதிகபட்ச வரம்புகள் எதுவும் இல்லை. திட்டத்தில் நுழைவு (Entry Load) அல்லது வெளியேறும் சுமை (Exit Load) இல்லை.
இந்த புதிய ஃபண்டின் தலைவர் மற்றும் நிர்வாகியாக ஷர்வன் குமார் கோயல் (Sharwan Kumar Goyal) இருப்பார் என யுடிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் அறிவித்துள்ளது.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
No comments:
Post a Comment