சக மாணவன் காதல் தொல்லை செய்ததால் பள்ளி மாணவி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சமலையில் உள்ள செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உப்பிலியபுரம் அருகே தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த விஷத்தை எடுத்து குடுத்துவிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அந்த மாணவியை துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து மாணவியிடம் விசாரித்தபோது, அந்த மாணவியுடன் அதே பள்ளியில் பயின்று வரும் சோபனபுரத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகன் சந்துரு என்ற மாணவன் கடந்த சில மாதங்களாக மாணவியை காதலிப்பதாக கொலை கொடுத்துள்ளது தெரியவந்தது.
அந்த மாணவியிடம் இந்த மாணவன் தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் அடிக்கடி காதல் தொல்லை செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக சோபனபுரம் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு இருந்தபோது அந்த மாணவன் சந்துரு இந்த மாணவியை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்தார்.
ஒரே பள்ளியில் படித்த பள்ளி மாணவன் சக மாணவியிடம் காதல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment