எட்டு வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டியூஷன் மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (35). இவர் எம் பில் படித்துள்ளதால் தனது வீட்டில் டியூசன் சென்டர் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் டியூஷன் பயின்று வருகின்றனர்
அவரது வீட்டின் அருகில் வசித்து வரும் மூன்றாம் வகுப்பு மாணவியான 8 வயது சிறுமி ஒருவர் கடந்த 3 மாதமாக அவரிடம் டியூஷன் படித்து வருகிறார்.
அந்த மாணவி மாலை டியூஷனுக்கு செல்வது வழக்கம் இந்த நிலையில் நேற்று மாலையில் டியூஷன் சென்று சிறிது நேரத்திலேயே சிறுமி வீட்டிற்கு ஓடி வந்துள்ளார். அந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது டியூஷன் ஆசிரியர் விக்னேஷ் தன்னை கண்ட இடங்களில் தொட்டு அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களது உறவினர்களை அழைத்துக் கொண்டு டியூசன் ஆசிரியர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு சென்று அவர்கள் டியூசன் ஆசிரியரை பிடித்து விசாரித்து உள்ளனர். அவர்களிடம் விக்னேஷ் எதை எதையோ கூறி பேச்சை மழுப்பளே சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் டியூஷன் ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் விக்னேஷ் அழைத்து சென்று அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அவர் மீது புகார் தெரிவித்துள்ளனர். டியூஷன் மாஸ்டர் விக்னேஷிடம் காவல் ஆய்வாளர் சிவகாமி தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
டியூஷனுக்கு அனுப்பப்பட்ட சிறுமியிடம் டியூஷன் மாஸ்டரே சில்மிஷ லீலைகளில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment