ரத்தினபுரி பகுதியில் குடிபோதையில் தொழிலாளியை இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (52). அதே பகுதியில் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் வேலை முடிந்தவுடன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி வருவது வழக்கம். அதேபோல் இவர் நேற்று இரவும் டாஸ்மாக் அருகே மது அருந்திவிட்டு இருந்துள்ளார். அப்போது அங்கு கண்ணப்பநகரை சேர்ந்த ஸ்ரீ விஷ்ணு என்ற வாலிபர் மதுபோதையில் பழனிச்சாமியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
அப்போது அந்த இளைஞர் இவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு பழனிசாமி மறுக்கவே ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அவரை கல்லால் தாறுமாறாக தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி சென்றுள்ளார்.
இளைஞரின் இந்த செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கல்லால் தாக்கி படுகாயம் அடைந்த பழனிச்சாமியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனிச்சாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தற்போது ரத்னபுரி காவல்துறையினர் வழக்குப் பதிந்து ஸ்ரீ விஷ்ணுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment