இந்த மாதம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த மாதம் என்றே கூறலாம். ஏனென்றால் பல நிறுவனங்கள் தங்களின் புதிய அறிமுகங்களை மக்களுக்கு விற்பனை செய்ய தொடங்கிவிட்டன. அதிலும் இந்த மாதம் பல புதிய கார்கள் வெளியாகிவிட்டது. இந்த மாதம் மேலும் பல கார்கள் அறிமுகமாக தயாராகிவிட்டது. அந்த வரிசையில் இந்த மாதம் வெளியாகவுள்ள மற்ற கார்களின் வரிசையை இந்த பட்டியலில் காணலாம்.
MG ZS EV 2022
இந்தியாவில் மிட் பிரீமியம் கார்களை விற்பனை செய்துவரும் பிரிட்டன் நாட்டின் MG நிறுவனம் இந்த மாதம் வெளியிடவுள்ள புதிய எலக்ட்ரிக் கார் இந்த ZS EV ஆகும். இந்த கார் ஒரு FACE LIFT காராக வெளியாகவுள்ளது. இந்த கார் இந்த மாதம் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த காரில் புதிய அதிகரிக்கப்பட ரேஞ்சு, பெரிய பேட்டரி போன்ற வசதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது.
இந்த காரில் மேலும் புதிய வெளிப்புற டிசைன், முன்பக்க கிரில், புதிய சார்ஜிங் சாக்கெட், 17 இன்ச் அலாய் வீல், புதிய பம்பர், LED ஹெட் லைட், DRLS போன்ற வசதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது.
VOLKSWAGEN VIRTUS 2022
ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா கார் வெளியாகிவிட்ட நிலையில் ஸ்கோடா நிறுவசனத்தின் தலைமை நிறுவனமான வோல்க்ஸ்வாகன் நிறுவனம் ஸ்லாவியா காரை சார்ந்து உருவாக்கியுள்ள புதிய VIRTUS கார் மார்ச் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த காரில் ஸ்லாவியா காரில் உள்ள அதே வசதிகள் இடம்பெறும் என்றாலும் பிராண்ட் மட்டும் மாறி வோல்க்ஸ்வாகன் நிறுவன பிராண்டிங்கில் வெளியாகவுள்ளது. எப்படி ஸ்கோடா ஸ்லாவியா ராபிட் காருக்கு பதிலாக அறிமுகமானதோ அதே போல இந்த ஸ்லாவியா காரும் வென்டோ காருக்கு பதிலாக அறிமுகமாகும் என்று தெரிகிறது.
இந்த காரிலும் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் என்ஜின் என்று இரண்டு என்ஜின் ஆப்ஷன்களை கொண்டு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
LEXUS NX 350H
இந்த மாதம் மார்ச் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள மற்றொரு கார் இரண்டாவது ஜெனெரேஷன் NX 350H ஆகும். இந்த SUV கார் ஏற்கனவே வெளிநாடுகளில் அறிமுகமாகிவிட்டாலும் இந்த மாதம் இந்தியவில் வெளியாகவுள்ளது.
இந்த காரில் புதிய டிசைன், ஹைபிரிட் டெக்னாலஜி, மற்றும் 2.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இதில் ஒரு 145 KW பவர் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த காரின் அதிகபட்ச பவர் 239 BHP ஆகும்.
BMW X4 2022
இந்த மாதம் BMW நிறுவனத்தின் இந்த X4 வெளியாகவுள்ளது. இதன் புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த காரில் உள்ள BLACK SHADOW எடிஷன் குறைந்த அளவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளன.
இந்த காரில் புதிதாக LED ஹெட் லைட், 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிலே, புதிய இன்போடைன்மெண்ட் சிஸ்டம் வசதி, வயர்லெஸ் சார்ஜிங், HUD டிஸ்பிலே, பேனரோமிக் சன் ரூப் போன்ற வசதிகள் இடம்பெறும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment