இனி இந்தியா, ரஷ்யா, சீனாதான்.. அமெரிக்கா இல்லை.. ஆச்சரியப்படுத்தும் அசுர வளர்ச்சி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, March 24, 2022

இனி இந்தியா, ரஷ்யா, சீனாதான்.. அமெரிக்கா இல்லை.. ஆச்சரியப்படுத்தும் அசுர வளர்ச்சி!

ஹைபர்சானிக் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை மிஞ்சும் வகையில் இந்தியா சீனா ரஷ்யா ஆகியவை வளர்ந்துள்ளதாக செனட் உறுப்பினர் எச்சரிக்கை.

அதி நவீன தொழில்நுட்பங்களில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் அந்த இடத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்து விட்டதாக அமெரிக்க செனட் உறுப்பினர் ஜேக் ரீட் கூறியுள்ளார்.
குறிப்பாக ஹைபர்சானிக் தொழில்நுட்பத்தில் இனியும் அமெரிக்கா முதலிடத்தில் இல்லை. அந்த இடத்தை இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் பிடித்து விட்டதாகவும் ஜேக் ரீட் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அமெரிக்க செனட் சபையின் பாதுகாப்புக் கமிட்டிக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், நாம் தொழில்நுட்ப ரீதியாக பலவற்றில் முன்னேறியுள்ளோம். பிற நாடுகளை விட முதலிடத்தில் இருந்து வருகிறோம். ஆனால் அது கடந்த காலமாகப் போகிறது. இனியும் நாம் முதலிடத்தில் இருக்க முடியாது. ஹைபர்சானிக் தொழில்நுட்பத்தில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகியவை முன்னேறி விட்டன. நம்மை பின்னுக்குத் தள்ள ஆரம்பித்து விட்டன.
இதுவரை அமெரிக்கா - ரஷ்யா என்ற போட்டிதான் நம்மிடையே இருந்தது. ஆனால் இப்போது அது முத்தரப்பு போட்டியாக மாறியுள்ளது. அமெரிக்கா - ரஷ்யாவுடன், சீனாவும் இதில் இணைந்து விட்டது. இந்தியாவையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது என்றார் அவர்.

ரீட் கூறுவது உண்மைதான். தொழில்நுட்ப ரீதியாக சீனா வெகுவாக முன்னேறியுள்ளது. அதி நவீன ஆயுதங்கள் தயாரிப்பிலும் சீனா பல படி அமெரிக்காவை விட முன்னேறி நிற்கிறது. இன்று ரஷ்யாவே சீனாவிடம் ஆயுதங்களைக் கேட்கும் அளவுக்கு சீனா வளர்ந்துள்ளது. ரஷ்யாவிடம் உள்ள அதி நவீன ஹைபர்சானிக் ஏவுகணைகளைப் பார்த்து அமெரிக்காவே நடுங்குகிறது. உக்ரைனில் அந்த வகை ஏவுகணைகளைத்தான் ரஷ்யா பயன்படுத்துகிறது. அதைத் தடுக்கவே முடியாது என்று அமெரிக்காவே கூறுகிறது.

இதேபோல ஆளில்லாத போர் விமானங்கள் தயாரிப்பிலும் சீனா ரஷ்யாவை விட ஒரு படி மேலே இருக்கிறது. அமெரிக்காவே மிரண்டு போகும் அளவுக்கு அதில் கில்லாடியாக இருக்கிறது சீனா. இப்படி பல்வேறு வகையிலும் இன்று அமெரிக்காவுக்குக் கடும் போட்டியாக சீனாவும் வந்து நிற்பதால், ரஷ்யாவை மட்டுமல்லாமல் சீனாவையும் சேர்த்து சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவும் செளர்யா என்ற அதி நவீன ஹைபர்சானிக் மிஸ்ஸைலை கையில் வைத்துள்ளது. இந்தியாவின் டிஆர்டிஓ தயாரித்துள்ள இந்த ஏவுகணையானது, விமானப்படையால் பயன்படுத்தப்படுகிறது. 700 முதல் 1900 கிலோமீட்டர் தூரம் வரையிலான இலக்கைத் தாக்கக் கூடிய வகையில் இந்த செளர்யா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 200 முதல் 1000 கிலோ வரையிலான எடை கொண்ட ஆயுதங்களை கொண்டு செல்ல முடியும். அணுகுண்டுகளையும் இதன் மூலம் ஏவ முடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad