வெட்கமில்லாத அமெரிக்கா.. எண்ணெய்க்காக எதிரி வெனிசூலாவின் காலில் விழுந்த பரிதாபம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 7, 2022

வெட்கமில்லாத அமெரிக்கா.. எண்ணெய்க்காக எதிரி வெனிசூலாவின் காலில் விழுந்த பரிதாபம்!

எந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை போட்டதோ அதே வெனிசூலாவிடம் எண்ணைய் கேட்டுள்ளது அமெரிக்கா.

எந்த நாட்டின் மீது கொடூரமான பொருளாதார தடைகளைப் போட்டு அந்த நாட்டை உருக்குலைக்க நினைத்ததோ, இப்போது அதே நாட்டிடம் தனது தேவைக்காக போய் கையேந்தி நிற்கிறது அமெரிக்கா.

தேவைன்னா காலைப் பிடிப்பது.. தேவையில்லாட்டி கழுத்தை நெரிப்பது.. இதுதான் அமெரிக்காவின் புத்தி, இயல்பு. ஒரு நாடு அதற்குத் தேவை என்றால் பணத்தைக் கொட்டி கொட்டி அதை தாஜா செய்யும். தேவையில்லாத நாடு என்றால் அதை அழித்து ஒழித்து சின்னாபின்னமாக்க தயங்காது.
இப்போது தனது புத்தியை மீண்டும் நிரூபித்துள்ளது அமெரிக்கா. உலக அளவில் எண்ணைய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முக்கியமானது ரஷ்யா, வெனிசூலா. இந்த இரண்டு நாடுகளையும் அமெரிக்காவுக்குப் பிடிக்காது. அதிலும் கம்யூனிச நாடான வெனிசூலா என்றாலே அமெரிக்காவுக்கு வேப்பங்காய்தான். அந்த நாட்டின் மீது ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகளைப் போட்டு வைத்துள்ளது. அதேபோல இப்போது உக்ரைன் விவகாரத்தைக் காரணம் காட்டி பொருளாதாரத் தடைகளைப் போட்டு வைத்துள்ளது. அமெரிக்காவின் வற்புறுத்தலின்பேரில் அதன் நேச நாடுகளும் பொருளாதாரத் தடைகளைப் போட்டுள்ளன.

ஆனால் இப்போது இந்த நாடுகளுக்கு கச்சா எண்ணெய் பற்றாக்குறை வந்து விட்டது. ரஷ்யாவின் எண்ணெய் கிடைக்காத நிலையில் பிற நாடுகளிடம் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அமெரிக்கா. என்ன கொடுமை என்றால் பரம வைரியாக கருதப்படும் வெனிசூலாவிடம் போய் தற்போது கையேந்தி நிற்கிறது அமெரிக்கா.

ரஷ்ய எண்ணெய் தடைபட்டிருப்பதாலும், ஓபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு, கூடுதலாக சப்ளை செய்ய மறுத்து விட்டதாலும், வெனிசூலாவிடம் போய்க் கெஞ்ச ஆரம்பித்துள்ளது அமெரிக்கா. அந்த நாட்டுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய தடை விதித்ததே இந்த அமெரிக்காதான். ஆனால் அந்தத் தடையை வெனிசூலா பொருட்படுத்தவே இல்லை. தனது நட்பு நாடுகளுக்கு குறிப்பாக ரஷ்ய ஆதரவு நாடுகளுக்கு அது கொடுத்தபடிதான் உள்ளது. ஆனால் தடை விதித்தது குறித்து பொருட்படுத்தாமல் எண்ணைய் வாங்க ஒரு குழுவை வெனிசூலாவுக்கு வெட்கமே இல்லாமல் அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா.

அதிபர் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க குழு. 2019ம் ஆண்டு முதலே அமெரிக்காவுக்கும், வெனிசூலாவுக்கும் இடையே தூதரக ரீதியிலான உறவு கூட இல்லை என்பது நினைவிருக்கலாம். ஆனால் ரஷ்யாவின் அதிரடியால் இன்று எதிரி வீட்டு வாசல் படிக்கு வந்து நிற்கிறது அமெரிக்கா.அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளுக்கும் கூட ரஷ்யாதான் முக்கியமான எண்ணெய் சப்ளை நாடாகும். இப்போது ரஷ்ய எண்ணெய் தடை பட்டுள்ளதால் அமெரிக்காவைப் போலவே ஐரோப்பிய நாடுகளும் பிற நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக அளவில் அதிக எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளில் சவூதி அரேபியாவும், ரஷ்யாவும்தான் டாப்பில் உள்ள நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜோ பிடன் அரசு இப்படி வெனிசூலாவிடம் போய்க் கெஞ்சி நிற்பதை அமெரிக்கர்களே விமர்சிக்கின்றனராம். வெனிசூலா அரசு மீது ஏகப்பட்ட தடைகளை விதித்துள்ள நிலையில் அவர்களிடமே போய் எண்ணெய் கேட்கும் செயல் சரியல்ல என்று பலரும் பிடன் அரசை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயித்து மதுரோ அதிபரானார். ஆனால் அந்தத் தேர்தலை மோசடி என்று அமெரிக்கா வர்ணித்தது. அந்த நாட்டுடன் தொடர்புகளையும் துண்டித்தது.

ஆனால் மதுரோ அமெரிக்காவைப் பொருட்படுத்தவே இல்லை. மாறாக, ரஷ்ய அதிபர் புடினுடன் நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். ரஷ்யாவுக்கு மிக நெருக்கமாக இருந்து வந்தது வெனிசூலா. இப்போது அதே மதுரோ அரசிடம்தான் போய் அமெரிக்கா கையேந்தி நிற்கிறது.
இதேபோல சவூதி அரேபியாவிடமும் பேச அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உற்பத்தி மற்றும் சப்ளையை அதிகரிக்க வேண்டும் என்று சவூதியை வற்புறுத்தத் திட்டமிட்டுள்ளது அமெரிக்கா. ஆனால் அப்படிச் செய்யக் கூடாது என்று சவூதிக்கு ரஷ்யா நெருக்குதல் கொடுத்து வருகிறது. ரஷ்யாவையும் புறக்கணிக்க முடியாது, அமெரிக்காவையும் பகைத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் சவூதி குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad