தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூலக கட்டிட பூட்டை உடைத்து கணினிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இயங்கி வரும் செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூலகம் உள்ளது. இதில் முதுகுளத்தூர் அருகே உள்ள வடக்கூர் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகன் அய்யலு (52) இங்கு நூலகராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மாலை நூலகத்தை பூட்டி விட்டு சென்றுள்ளார். வாக்கிங் வந்தவர்கள் நூலகம் திறந்த நிலையில் உள்ளது என்று நூலகர் அய்யலுக்கு தகவல் அளித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உயர் அதிகாரிகளுக்கும் போலீஸாருக்கும் தகவல் அளித்துள்ளார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது நூலகத்தின் உள்ளே இருந்த ரூ.20,450 மதிப்பிலான இரண்டு கணினி ஒரு சிபியு, ஒரு கீபோர்டு மூன்று மவுஸ்கள் திருடு போனது தெரிய வந்தது. நூலகர் அய்யலு அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
முன்னதாக இப்பள்ளி கணினி அறையில் 4 கணினிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை இதுவரை பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment