பெண்களுக்கேற்ற மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்!! ஆய்வறிக்கைகள் வெளியீடு!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 5, 2022

பெண்களுக்கேற்ற மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்!! ஆய்வறிக்கைகள் வெளியீடு!!

தங்கம் மற்றும் பங்கு வர்த்தகத்தைத் தாண்டி மியூச்சுவல் ஃபண்டில் 22% பெண்கள் முதலீடு செய்துள்ளனர்.
கோவிட் -19 பெருந்தொற்று காலங்களில் 5 இல் ஒரு பங்கு பெண்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளதாக டிஜிட்டல் வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனமான ஸ்கிரிப் பாக்ஸ் (Scripbox) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டதாக கூறியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக பெருந்தொற்றுகளால் ஏற்பட்ட பொருளாதார சரிவில் பெண்கள் தங்கம் மீதான முதலீடுகளைத் தாண்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மீது தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.
அதிலும் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 22% பெண்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மற்றும் பங்கு வர்த்தகத்திலும் முதலீடு செய்து வருவதாக ஸ்கிரிப் பாக்ஸ் ஆய்வுகள் கூறுகின்றன.

ஆய்வின்படி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுக மிகவும் விருப்பமான முதலீடுகளில் ஒன்றாக கருதப்படுவதாகவும். குறிப்பாக 22% பெண்கள் தங்கம், பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதாகவும்.

34% பெண்கள் தங்களுடைய பணத்தை நிலையான வைப்புத்தொகை, தொடர் வைப்புத்தொகை, PPF மற்றும் சேமிப்புக் கணக்குகள் போன்ற பாரம்பரிய முதலீடுகளில் கலந்து முதலீடு செய்வதிலும் ஆர்வமாக இருப்பதாக கூறுகிறது.
மேலும் 30% பெண்கள் நிதித் திட்டமிடல் மற்றும் முதலீடு பற்றிய தகவல்களுக்கு டிஜிட்டல் முதலீட்டு தளங்களை நம்பியுள்ளனர். மேலும் 70% பெண்கள் தங்களின் சொந்த சம்பளத்தில் 34% சேமிப்புக்காக ஒதுக்குவதாகவும் அவ்வறிக்கைகள் கூறுகின்றன.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

No comments:

Post a Comment

Post Top Ad