திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே உள்ள சோதனைச் சாவடியில் தச்சூர் காவல்நிலைய போலீசார் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்தனர்.
இங்கிட்டு அல்வா... அங்குட்டு ஸ்டிக்கர்... திமுக ஆட்சி பலே... பலே... ஜெயக்குமார் கிண்டல்!
அதில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். லாரியில் இருந்த தஞ்சாவூரை சேர்ந்த சுகுமார் மற்றும் முருகன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டது தெரியவந்தது.
பின்னர், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் 4 டன், கிருஷ்ணகிரியில் 7 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கர்நாடகாவுக்கு கடத்தப்பட்டது தெரியவந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குடும்ப அட்டைதார்கள் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரத்தில் ரேஷன் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் ஊழியர்கள், அதிகாரிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment