அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? - பாஜக பிரமுகருக்கு டோஸ் விட்ட கோர்ட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 9, 2022

அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? - பாஜக பிரமுகருக்கு டோஸ் விட்ட கோர்ட்!

தமிழக பாஜக பிரமுகர் கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள பாஜக பிரமுகர் கல்யாணராமன்,இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்யாணராமன் வழக்கு தொடரந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் அளித்த கோபிநாத் சார்பில் வழக்கை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் 'ஏற்கெனவே மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் வெறுப்புணர்வோடு பேசமாட்டேன் என்று மனுத் தாக்கல் செய்துவிட்டு மீண்டும் அப்படியே கல்யாணராமன் தொடர்ந்து பேசியுள்ளார்' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ''நீதிமன்ற உத்தரவை அவர் மதிப்பதில்லை என்றும், மத மோதலை உருவாக்கும் விதமாக பேசுவதால் அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது சரிதான் என்வும், எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது நீதிபதி, மனுதாரர் நீதிமன்றத்தை மதிக்கமாட்டார், காவல்துறையை மதிக்கமாட்டார்; சட்டத்தை மதிக்கமாட்டார் என்றும். அவர் சட்டத்திற்கு Dபாற்பட்டவரா? எனவும் கண்டனம் தெரிவித்தார்.

இதனையடுத்து மனு தொடர்பாக நான்கு வாரத்தில் பதில் அளிக்க மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad